டெல்லியில் என்ன இருக்கு தெரியுமா?அடிமடியிலேயே கை வைக்கும் ஓபிஎஸ்..விக்கித்து நிற்கும் எடப்பாடி டீம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி தரப்பு வாதம் வைத்து வரும் நிலையில்.. அப்படி ஏதாவது நடந்தால் இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் தரப்பு முயலும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆவணத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தில் கையெழுத்து போடவும் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.

வெடிப்பு

வெடிப்பு

இதுதான் தற்போது அதிமுகவில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பொதுக்குழுவிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு உள்ளது. அதோடு ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்ட கூடாது என்றும் வழக்கு உள்ளது.

சின்னம் முடக்கம்

சின்னம் முடக்கம்

இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி தரப்பு வாதம் வைக்கும் பட்சத்தில், இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் தரப்பு முயலும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் முறையிடும் என்று கூறுகிறார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை சட்ட விதிகளை மீறி நீக்கிவிட்டதாக கூறி ஓபிஎஸ் டீம் தேர்தல் ஆணையத்தில் முறையிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நீக்கம் எப்படி?

நீக்கம் எப்படி?

இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் வட்டாரத்தில் விசாரித்ததில், இந்திய தேர்தல் ஆணையத்திலும், மாநில தேர்தல் ஆணையத்திலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ எடப்பாடி பழனிசாமி என்றுதான் இருக்கிறது. டெல்லியில் இப்படித்தான் தேர்தல் ஆணையத்தில் பதிவாகி இருக்கிறது. இரட்டை இலை முடக்கத்திற்கு பின் மீண்டும் அதிமுகவிற்கு சின்னம் கிடைத்த போதும் இப்படித்தான் பதிவு செய்யப்பட்டது. இதை பின்னர் கோர்ட்டும் சசிகலா வழக்கில் ஏற்றுக்கொண்டது.

டெல்லியில் என்ன இருக்கு

டெல்லியில் என்ன இருக்கு

தேர்தல் ஆணையத்தில் இன்று வரை அதுதான் இருக்கிறது. 5 வருடம் முடியும் வரை அதுதான் இருக்க வேண்டும். இதுதான் அங்கீகரிக்கப்பட்ட சட்டம். நாங்கள்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடந்த வருடம் இவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தை எடப்பாடி அனுப்பவில்லையா? அவரும் தானே அனுப்பினார். அப்படி இருக்க எப்படி இப்போது இப்படி பேசலாம்.

Recommended Video

    OPS-க்கு பதில் கடிதம் எழுதிய EPS... திமிறி எழும் 5 சந்தேகங்கள் *Politics
    குழப்பம் உள்ளது - முடக்கம்

    குழப்பம் உள்ளது - முடக்கம்

    தேர்தல் ஆணையத்தில் உள்ள பதவியை சட்டத்தை மீறி நீக்கினால் கட்சியின் சின்னம் முடங்கும் என்கிறார்கள், ஓ பன்னீர்ச்செல்வம் ஆதரவாளர்கள். அதாவது கட்சியில் முறைகேடு நடத்தப்பதாக கூறி, தேர்தல் ஆணைய விதி மீறப்பட்டதாக கூறி ஓபிஎஸ் தரப்பு இந்த முயற்சியை செய்யும் என்கிறார்கள். ஆனால் இப்போதே இந்த முயற்சியை செய்தால் அது ஓபிஎஸ்ஸுக்கு தொண்டர்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால்.. கடைசி அஸ்திரமாக.. அதாவது எடப்பாடி பொதுச்செயலாளர் ஆகும் பட்சத்தில் இந்த அஸ்திரத்தை பயன்படுத்த ஓபிஎஸ் தரப்பு முயலும் என்கிறார்கள் அவருக்கு ஆதரவாக இருக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+