வாரணாசி கன்பார்ம்.. அடுத்த தொகுதி ராமநாதபுரம்? தமிழ்நாட்டில் களமிறங்கும் மோடி? பாஜக பிளான் என்ன?
சென்னை: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதியில் போட்டியிடுவாரா? இரண்டாவது தொகுதி எதுவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக முதல் கட்டமாக அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில், மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத்தின் காந்திநகரில் மீண்டும் களமிறங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுவார்கள், ஸ்மிருதி இரானி 2019 இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அசத்தல் வெற்றியைப் பெற்றார். ராஜஸ்தானின் கோட்டாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
28 பெண்கள், 50 வயதுக்குட்பட்ட 47 தலைவர்கள், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 57 பேர் என 34 மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 195 பேரில், 51 பேர் அனைத்து முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 20 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐந்து பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.
இரண்டாவது தொகுதி: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதியில் போட்டியிடுவாரா? இரண்டாவது தொகுதி எதுவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் போட்டியாளர்கள் லிஸ்ட் என்று அறிவிக்கப்படவில்லை.
ஒருவேளை மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் அவர் தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. ஏன் உலக அளவில் அதிக தொண்டர்கள் கொண்ட கட்சியில் பாஜக ஒன்றாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் என்னவோ பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை.
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக ஒருவர் கூட எம்பியாக தேர்வாகவில்லை. அந்த அளவிற்கு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாத சூழ்நிலை உள்ளது. பாஜகவிற்கு சில மாவட்டங்களில் சரியான பூத் கமிட்டி கூட இல்லாத நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் மோசம்: பூத் கமிட்டியில் ஆள் போடுவதற்கு கூட உறுப்பினர்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும் பாஜக பெரிதாக வலுவாக இல்லை.
பாஜகவை தென்னிந்தியாவில் வலுப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாட்டில் பாஜகவின் கால் தடத்தை பதிக்கும் விதமாகவும் பிரதமர் மோடி சில திட்டங்களில் இறங்கி உள்ளாராம். தென்னிந்தியாவின் அரசியல் சூழ்நிலையை, முக்கியமாக தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை மொத்தமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
தமிழ்நாடு போட்டி: இதன் காரணமாக தமிழ்நாட்டில் மோடி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஜனவரியில் மட்டும் திருச்சி விமான நிலைய திறப்பு, அதன்பின் கோலோ இந்தியா, ராமநாதபுரம் கோவில் விசிட் என்று பல முறை மோடி வந்துவிட்டார். அதன்பின் மீண்டும் மார்ச் 4ம் தேதி தமிழ்நாட்டிற்கு மோடி வருகை புரிய உள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அவர்..முக்கியமான அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதி - தமிழ்நாட்டில் ராமநாதபுரம் என்று இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பை அவர் இந்த மாதம் மேற்கொள்ள உள்ள தமிழ்நாடு பயணத்தில் அறிவிக்க இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக பிளான்: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் அல்லது மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.
அதன்பின் வதோதரா தொகுதியில் பிரதமர் மோடி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார்.
ஆலோசனை: தென் மாநில பாஜக தலைவர்கள், பொதுச்செயலாளர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜே.பி நட்டா இந்த திட்டத்தை தெரிவித்து அது தொடர்பாக நேற்று ஆலோசனை கேட்டு இருக்கிறார். . இதற்கு பெரும்பாலான தலைவர்கள், உடனடியாக ஆதரவு வழங்கி உள்ளனர். மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் மோடி எங்கே ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications