தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா? ஏன் யாருக்கும் பணமே தர கூடாதுனு எண்ணமா? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாநிலத்தில் என்னதான் நடக்கிறது? என கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஜூன் 27ஆம் தேதி ஒத்தி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 35,039 ரேஷன் கடைகள் உள்ளன. பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, மானிய விலையில் சர்க்கரை, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருளை வாங்கும் பல கோடி தமிழக மக்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய், சிறு தானியங்கள், ராகி உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் கலந்து கொண்டு ஒப்பந்தம் பெற்ற கேடிவி ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் எண்ணெய் சப்ளை செய்தது. அந்த வகையில் தமிழக அரசு தங்கள் நிறுவனத்திற்கு 141.22 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகவும், டெண்டர் நிபந்தனைப்படி 30 நாட்களில் இந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்பதால் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிறுவனத்தின் தரப்பில், "நிலுவைத் தொகை இருந்த போது கூட நாங்கள் தொடர்ந்து சமையல் எண்ணெய் சப்ளை செய்து வருகிறோம். தற்போது வரை அரசு எங்களுக்கு ரூ 200 கோடிக்கும் மேல் நிலுவை வைத்துள்ளது.
இந்த தொகையை வழங்காமல் அடுத்தடுத்து டெண்டர் கேட்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2 வாரங்களாக ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை, அரசு வழங்க வேண்டிய தொகைகள் வழங்கப்படவில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இது போன்ற வழங்க வேண்டிய தொகைகளை வழங்காமல் வைத்திருப்பது எதைக் காட்டுகிறது? நிலுவை தொகைகளை வழங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அரசு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
மாநிலத்தில் ஏதேனும் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என்றும் அவர் கேட்டார். மனுதாரர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை தருவது குறித்து அரசிடம் கருத்தை அறிந்து தெரிவிக்கும் படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications