ரேஷன் கார்டு மொத்தமா முடக்கப்படும்.. ஜாக்கிரதையாக இருங்க.. வந்து விழுந்த வார்னிங்! தமிழக அரசு முடிவு?
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி திருட்டை தடுக்கும் விதமாக முக்கியமான நடவடிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசு எடுக்க உள்ளதாம். இதற்கான ஆலோசனைகள் அரசு சார்பாக செய்யப்பட்டு வருகிறதாம்.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள். முக்கியமாக கேரளா, ஆந்திராவில் அதிக விலைக்கு இந்த பொருட்களை விற்பனை செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தடுக்கும் வழி முறைகள்: சமீபத்தில் கூட அரிசி பற்றாக்குறை புகார் வந்தால், 24 மணி நேரத்தில் இதில் பறக்கும்படை ஆய்வு செய்ய வேண்டும். அரிசி திருடப்பட்டுள்ளதா என்பதை மண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் திருட்டுகளை தவிர்க்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், பருப்பு பாக்கெட்டுகள் அனைத்திலும் தமிழ்நாடு அரசின் முத்திரை இடம்பெறும். அதற்கு மேலே க்யூ ஆர் கோடு இடம்பெறும். இந்த க்யூ ஆர் கோடு உள்ள மூட்டைகளை யாரும் வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாராவது திருடி வெளியே விற்றால் இதை வாங்க கூடாது என்று உத்தரவும் பிரிக்கப்பட்டு உள்ளது.
புதிய விதிமுறை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி திருட்டை தடுக்கும் விதமாக முக்கியமான நடவடிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசு எடுக்க உள்ளதாம். இதற்கான ஆலோசனைகள் அரசு சார்பாக செய்யப்பட்டு வருகிறதாம்.
அதன்படி ரேஷன் பொருட்களை வெளியே விற்பவர்கள், திருடுபவர்கள் ஆகியோரின் ரேஷன் கார்டுகளை முடக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளதாம். அதாவது வெளியே விற்பவர்கள், திருடுபவர்கள் ஆகியோரின் ரேஷன் கார்டுகள்தான் தடை செய்யப்படும் திட்டத்தில் இருக்கிறது.
கர்நாடகாவில் இந்த சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications