"உதயசூரியனை" டேமேஜ் செய்ய மாஸ்டர் பிளான்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தது.. பறந்துவந்த அசைன்மென்ட்
திமுக அமைச்சர்கள் மீது புகார்களை தெரிவிக்க உள்ளாராம் அண்ணாமலை
சென்னை: திமுகவுக்கு எதிரான முக்கிய அஸ்திரத்தை தமிழக பாஜக கையில் எடுக்க போகிறது.. ஒருபக்கம் அதிமுகவை ஓவர்டேக் செய்து கொண்டே, மறுபக்கம் திமுகவை டேமேஜ் செய்யும் வேலையைதான் பாஜக ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுக-பாஜக கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் முறிந்து போய்விட்டது.. இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பெரிய அடியை கொடுத்தது.
அதேசமயம் திமுக அபார வெற்றி பெற்றுவிட்டது.. இது பாஜகவுக்கு பெருத்த ஷாக்காகவே இருந்தது.. எப்படியும் கொங்குவில் வெற்றி பெறுவோம் என்றும், கோவையில் வெற்றி பெற முடியாவிட்டால், எம்எல்ஏ பதவியையே ராஜினாமா செய்வேன் என்றும் வானதி சீனிவாசன் ஒருமுறை கூறியிருந்த நிலையில், திமுக கொங்குவில் கொடி நாட்டி உள்ளது.

படுதோல்வி
திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று சமீபகாலமாக சொல்ல தொடங்கி உள்ள பாஜக, அதிர்ச்சிக்கு உள்ளாகினாலும், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கிவிட்டது.. படுதோல்வியை சந்தித்தும், திமுகவுக்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய எந்த செயல்திட்டங்களையும் அதிமுக தலைவர்கள் முன்னெடுக்கவில்லை என்ற ஆதங்கம் பாஜகவுக்கு உள்ளது.. ஒருவேளை இதற்கு ரெய்டுகள் பயமும் ஒரு காரணமாக இருக்கலாம்...

போர்க்குணம்
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஆக்ரோஷமான எதிர்க்கட்சியாக தமிழக பாஜகதான் இருக்கிறது என்பதற்கேற்ப திமுகவுக்கு எதிரானவைகளை முன் வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார் அண்ணாமலை... அதாவது, எதிர்க்கட்சியின் போர்க்குணத்தை அதிமுக இழந்து விட்டது... இந்த இடைவெளியை பாஜக பயன்படுத்த வேண்டும். அதிமுக செய்ய வேண்டியதை பாஜக செய்கிறது என்கிற இமேஜ் மக்களிடம் உருவாவது அவசியம்.. அதற்கு திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் என அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாலினிடம் புகார்
திமுகவின் நல்லாட்சி இமேஜ்ஜை தகர்க்க வேண்டுமாயின் ஆட்சியின் ஊழல்களை குறிப்பாக ஸ்டாலின் குடும்பத்தினரின் ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார் அண்ணாமலை. அதற்கு முதல் ஸ்டெப் தான் பிஜிஆர் எனெர்ஜி நிறுவனத்தை மையப்படுத்திய ஊழலை அம்பலப்படுத்திய விவகாரமாகும்.. ஊழல்களால் மட்டுமே திமுக அரசின் இமேஜை உடைக்க முடியும் என திட்டமிட்டே அந்த லகானை கையிலெடுத்திருக்கிறார்.

நெருக்கமான அமைச்சர்கள்
முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர மத்திய அரசின் உதவியையும் பெற்று வருகிறார் அண்ணாமலை என்கிறார்கள் தமிழக பாஜகவினர். இதைதான் நேற்று முன்தினம் அண்ணமலை கொளுத்தி போட்டிருந்தார்.. செய்தியாளர் பேட்டியில், "ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்திற்கு, முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மறுபடியும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.. இதன்மூலம் திமுகவின் ஊழல் ஆரம்பமாக அமைந்துள்ளது. ஒரு குடும்பம் கையை காட்டும் நபர்களுக்கே திமுக ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது..

ஆதாரம்
என்னை கைது செய்தாலும், வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன். ஊழலை பாஜக மட்டுமே தட்டி கேட்கிறது.. செந்தில் பாலாஜியின் ஊழல் குறித்து ஆதாரத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்ப போகிறேன்.. செபிக்கும் புகார் அனுப்ப உள்ளேன்... ஊழல் அதிகரித்தால் ஜனநாயகம் இறந்து போகும் என்பதால், ஊழல் குறித்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனக்கு கெடு வைக்க, அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன பிரம்மனா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications