Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடும் இந்தியாவுக்குள் தானே இருக்கு? நிதியமைச்சருக்குத் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு இந்தியாவிற்குள் தான் இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று பத்திரிகையாளர் லக்ஷ்மணன் கூறி இருக்கிறார்.

மாநில அரசுகளுக்கு இடையே ஜிஎஸ்டி வரியைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக நாடு முழுவதும் ஒரு எதிர்ப்பு அலையை பாஜக தலைமையிலான மத்திய அரசு சம்பாதித்திருக்கிறது.

Is the central government ignoring Tamil Nadu?

ஏறக்குறைய தென் இந்தியாவே மத்திய அரசுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளன. south tax movement என்று அதை அடையாளப்படுத்தும் அளவுக்கு விசயம் தீவிரமாகி உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்தமாகத் தலைநகரமே தத்தளித்தது. அதைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதந்தன.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்யத் தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாய் வழங்குமாறும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயைத் தரவேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

Is the central government ignoring Tamil Nadu?

ஆனால், உரிய நிதி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். கூடவே உங்கள் அப்பா வீட்டுப் பணத்தையா கேட்டோம் என்றும் விமர்சித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே இந்த விவகாரம் தொடர்பாக ஒரு மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தை டி ஆர் பாலு எழுப்பினார். அவரது பேச்சின் போது மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட்டுப் பேசியதால் சர்ச்சை அதிகரித்தது.

Is the central government ignoring Tamil Nadu?

இதனிடையே திமுக எம்.பி., வில்சன் நிதி பகிர்வு தொடர்பாக மத்திய நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அளிக்கப்பட்ட எழுத்துப் பூர்வமான ஆவணத்தில், நிதி பகிர்வு தொடர்பாக முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

தமிழ்நாடு கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சத்து 674.49 கோடி ரூபாயை ஜிஎஸ்டி ஆக மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. அதில் மத்திய அரசு இதுவரை 1 லட்சத்து 58ஆயிரத்து 145.62 கோடி ரூபாய்தான் கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய அநீதி என திமுகவினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

Is the central government ignoring Tamil Nadu?

இந்தப் போராட்டத்தில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநில முதல்வர்களும் கரம் கோர்த்து மோடி அரசுக்கு எதிராகக் களம் இறங்கி உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன், 'தமிழன் மட்டும் நிதி கேட்டு பிச்சை எடுக்க வேண்டுமா?' என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.

"முதலில் கோரிகையாக மாநில அரசு வைத்தது. தரவில்லை என்றதும் ஆதங்கமாக அது மாறியது. பின்னர் கோபமான குரலில் கேட்டார்கள். அதன் பின்னர் மத்திய அரசிடம் இருந்து வந்த வார்த்தைகள் ஆறுதலாகக் கூட இல்லை.

Is the central government ignoring Tamil Nadu?

தென் இந்திய மக்களை அவமதிப்பதாக இருந்தது மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் அளித்த பதில். அதனால்தான் நாங்கள் எப்படி வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் வேலைகளில் மாநில அரசுகள் இறங்கின.

அதன் அடிப்படையில் தான் இன்று மாநில அரசு ஒரு ரூபாய் வரியாக மத்திய அரசுக்கு அளித்தால், அதற்கு அவர்கள் எவ்வளவு திரும்ப அளிக்கிறார்கள் என்பதை ஆவணங்கள் மூலம் எடுத்துக் காட்டி வருகிறார்கள்.

இந்த மாதிரியான நடைமுறை எல்லாம் கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்னால் இல்லை. ஏதோ நிதி கேட்பார்கள். தரவில்லை என்றால் விமர்சனம் செய்வார்கள். இப்படி புள்ளிவிவரங்களை எடுத்துப் போட்டு அம்பலப்படுத்த மாட்டார்கள். அந்தளவுக்கு அன்றைய அரசியல் இல்லை.

Is the central government ignoring Tamil Nadu?

இதே நிதி பகிர்வு விவகாரத்தில் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது என்ன பேசினார்? அந்த வீடியோ இரண்டு நாட்களாகச் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

'நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? நீங்கள் என்ன எங்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?' என்று மோடி அந்த வீடியோவில் மத்திய அரசை விமர்சித்திருக்கிறார். அவர் அன்றைக்குக் காங்கிரஸ் அரசைப் பார்த்துக் கேட்ட கேள்விகள் இன்றைக்கு அவரை நோக்கித் திரும்பி உள்ளது.

இது ஏதோ அரசியல் சர்ச்சை அல்ல. நியாயமான உரிமைக்கான குரல். தென் மாநில மக்களும் இந்தியாவில் தான் உள்ளார்கள் என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

Is the central government ignoring Tamil Nadu?

ஒரு மாநிலம் பின் தங்கி உள்ளது. ஒரு மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆகவே பின் தங்கிய மாநில வளர்ச்சிக்காக நிதி அதிகம் வழங்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.

நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பாருங்கள். மாநிலங்களைப் பிரித்துப் பார்க்காதீர்கள் என்கிறார். அவரது கருத்தும் சரிதான். நாம் அனைவரும் இந்தியர்கள்தான். வளர்ச்சி அடையாத மாநிலத்திற்கு நிதியை அதிகம் தருவதில் தவறில்லை.

Is the central government ignoring Tamil Nadu?

ஆனால், கடந்த முறை அதிகமாகக் கொடுத்தோம். அடுத்த முறை வரும் போது அது சரி செய்யப்பட்ட வேண்டுமா ? வேண்டாமா? தொடர்ந்து ஒரு மாநிலத்திலிருந்து அதிக நிதியை வசூலித்து வளர்ச்சி இல்லாத மாநிலத்திற்குக் கொடுத்துக் கொண்டே இருப்பீர்களா? அதற்கு ஒரு கால வரம்பு வேண்டாமா? அதைச் செய்ய வேண்டியதுதானே? அதுதானே நியாயம்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+