செந்தில் பாலாஜி வரட்டும்.. காத்திருக்கும் ஸ்டாலின்.. சில்லு சில்லாக நொறுங்குதே! என்ன நடக்குது?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை தாமதமாவதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு தரப்பு காத்து இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
செந்தில் பாலாஜி ஜாமீன் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் நம்மிடம் பேட்டி அளித்துள்ளார். அதில், செந்தில் பாலாஜிக்கு உறுதியாக ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவில்லை? உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு பென்ச் ஒவ்வொரு மாதிரி முடிவுகளை எடுக்கிறார்கள். இந்த முறை அமலாக்கத்துறையை கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளனர். எத்தனை நாள் உள்ளே வைத்து இருப்பீர்கள் என்று அமலாக்கத்துறையை கேட்டுள்ளனர். செந்தில் பாலாஜி இதனால் எப்போது வெளியே வருவார் என்று தெரியவில்லை.

கீழ் கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை நடக்க தொடங்கிவிட்டது. ஏற்கனவே வாக்குமூலம் வாங்கப்பட்டுவிட்டது. இனி இதில் அவர் சாட்சியங்களை எப்படி மாற்ற முடியும். இனி அவரை உள்ளே வைக்க வேண்டிய அவசியம் என்ன? இதனால் செந்தில் பாலாஜி எப்போது வெளியே வருவார் என்று தெரியவில்லை.
செந்தில் பாலாஜி விரைவில் வரலாம். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை தாமதம் செய்கிறார்கள். செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். ஆனால் ஸ்டாலின் அவருக்காக காத்து இருக்கிறாரா? அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை? சீனியர்கள் சிலர் வேலை பார்க்கவில்லை என்று புகார் உள்ளது. இதை எல்லாம் ஆய்வு செய்வதால்.. தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.
எதையாவது செய்துவிட்டு அமெரிக்கா போக வேண்டாம்.. வந்த பின் பார்த்துக்கொள்ளலாம். செந்தில் பாலாஜியும் வரட்டும்.. இப்போது செய்துவிட்டு அமெரிக்கா சென்றால்.. இங்கே ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாது என்று, என்று பிரியன் தெரிவித்துள்ளார்.
மாற்றங்கள்: சமீபத்தில் தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகாரிகள் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்ததாக.. தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடு செல்வது, 2026 சட்டசபை தேர்தல், ஆட்சி அதிகாரத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.
செந்தில் பாலாஜி: ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை தாமதமாவதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதானவழக்கில் இதுவரை வைக்கப்பட்ட வாதங்கள் கவனம் பெறுகின்றன. இந்த வழக்கில் வாதங்கள் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளன. கடந்த வாரம் இந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.. நேற்று முதல்நாள் உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைக்க முடியாது.. கண்டிப்பாக உத்தரவு பிறப்பிப்போம் என்று கூறியது. இதையடுத்து எழுத்து பூர்வமாக அமலாக்கத்துறை வாதங்களை வைத்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இனி வாதங்கள் இல்லாத நிலையில் விரைவில் செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய உத்தரவு வரும்.












Click it and Unblock the Notifications