செந்தில் பாலாஜி ரிட்டர்ன்ஸ்.. தள்ளி வைக்கப்பட்ட அமைச்சரவை மாற்றம்? குலுங்கும் கோட்டை.. என்ன நடந்தது?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை தாமதமாவதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று அமைச்சரவை மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை செயலாளராக என்.முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகாரிகள் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்ததாக.. தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடு செல்வது, 2026 சட்டசபை தேர்தல், ஆட்சி அதிகாரத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.
செந்தில் பாலாஜி: ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை தாமதமாவதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதானவழக்கில் இதுவரை வைக்கப்பட்ட வாதங்கள் கவனம் பெறுகின்றன. இந்த வழக்கில் வாதங்கள் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளன. கடந்த வாரம் இந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.. நேற்று முதல்நாள் உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைக்க முடியாது.. கண்டிப்பாக உத்தரவு பிறப்பிப்போம் என்று கூறியது. இதையடுத்து எழுத்து பூர்வமாக அமலாக்கத்துறை வாதங்களை வைத்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இனி வாதங்கள் இல்லாத நிலையில் விரைவில் செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய உத்தரவு வரும்.
வழக்கு வாதம்: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள்: இதுவரை இந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
1. முதலில் அமலாக்கத்துறை இதில் மிகவும் தாமதமாக ஆவணங்களை கொடுத்தது. உதாரணமாக கடந்த மே 6ம் தேதி விசாரணையின் போது அமலாக்கத்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுதுகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. அன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அன்றுதான் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.
2. அமலாக்கக்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.
3. இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது, என்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார்.
4. இதையடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்.. நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை, என்று அமலாக்கத்துறை கூறியது . தொடர்ந்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது.. இதனால் நீதிபதிகள் பதில் மனுவை படிக்க கூட முடியவில்லை. இதனால் அப்போது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications