Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுங்கச்சாவடி அருகே வீடு உள்ளதா.. மாதம் 340 ரூபாய் கட்டி வாகனங்களுக்கு பாஸ் எடுப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் வெறும் 340 ரூபாய் என்கிற அளவில் வழங்கப்படுகிறது. அதனை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் பூதாகரமாகி உள்ளது.இந்த சுங்கச்சாவடியை அகற்ற கோரி பொதுமக்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அதிமுக எம்எல்ஏ ஆர்பி உதயக்குமார், இந்த விவகாரத்திற்காக கைதும் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

vehicles

இது ஒருபுறம் எனில், திமுகவும் சுங்கச்சாவடிகளுக்கு எதிராககுரல் கொடுத்து வருகிறது. காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இதுபற்றி ராஜ்யசபாவில் திமுக எம்பி வில்சன் நேற்று பேசும் போது, தமிழ்நாட்டில் 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் நடைமுறைகளுக்கு மாறாக 5 சுங்கச்சாவடிகள் மாநகராட்சி, நகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 60 கி.மீ. குறைவான இடைவெளியில் இரண்டு சுங்கச் சாவடிகள் அமைக்கப்படக் கூடாது என்கிற வரம்பும் உள்ளது. இந்த வரம்பை மீறி 20 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சுங்கச்சாவடிகளை அகற்ற ஏற்கனவே மத்திய அரசு உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்களுக்கு வரம்பு உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால், பின்னர் சுங்கக் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (எண் 32) உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் ரூ. 28.54 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், முழுக் கட்டணம் வசூலிக்கப்படாமல் 40 சதவீத கட்டணத்தை குறைக்க சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இங்கு இந்த கட்டணத்தை குறைக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. சுங்கக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த சுதந்திரமான அமைப்பு எதுவுமில்லை.

முறையில்லாமல் சுங்கக் கட்டணங்களை உயர்த்தும் முறை என்பது சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் ஈட்ட மட்டுமே உதவுகிறது. சுங்கச்சாவடிகளில் செய்யப்படும் முதலீடுகள், வசூலிக்கப்பட்ட தொகை ஆகியவை பகுப்பாய்வு செய்ய ஒரு சுதந்திரமான அமைப்பு தேவை. அல்லது புதிய வாகனத்தைப் பதிவு செய்யும்போது "ஒரு முறை" கட்டணமாக வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்து, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று இது தொடர்பாக பதில் அளித்த அமைச்சர் நிதின் கட்காரி, நாட்டில் 30.06.2024 வரை தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 983 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் 67 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகள் 457 புதிய சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் 15 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எல்&டி கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் 1,124.19 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 981.56 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் செயல்பாடு மற்றும் சாலைகளின் தரம் குறித்து , இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1033 வாயிலாக புகார் செய்யலாம்" என்றார்.

சுங்கச்சாவடிகள் மூடப்படுவது குறித்து அரசு எந்த பதிலும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் புதிய தரமான சாலைகள் அமைக்கப்படும் எல்லா இடங்களிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளுடன் தான் வாழ்க்கை என்பது தமிழ்நாட்டின் பெரும்பலான நகரங்களின் தலையெழுத்தாக உள்ளது.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் வெறும் 340 ரூபாய்க்கு கிடைக்கிறது. எனவே சுங்கச்சாவடி அருகே வாழும் மக்கள் இதன் மூலம் ஓரளவு நிவாரணம் பெறலாம். அதேநேரம் வணிக வாகனங்களுக்கு கட்டம் அதிகமாகவே இருக்கும். 50 சதவீதம் அளவிற்கு கட்டணம் இருக்கும்.

ஒரு மாவட்டத்தில் சுங்கச்சாவடி இருக்கிறது என்றால் அந்த பதிவெண் கொண்ட வாகனங்கள் உள்ளூர் வாகனங்களாக கருதப்படும். அந்த வாகனங்களுக்கு மற்ற வாகனங்களை விட கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படும். உதாரணமாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் மற்றும் பரனூர் சுங்கச்சாவடியில் கார் ஜீப் வேன் போன்ற வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் 70 ரூபாய் என்றால், உள்ளூர் பதிவு பெற்ற வாகனங்களுக்கு வெறும் 35 ரூபாய் தான் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் மற்ற ஊர் பேருந்துகளுக்கு 240 என்றால், உள்ளூர் பேருந்துகளுக்கு 120 தான் கட்டணம் ஆகும். அதாவது வழக்கமான கட்டணத்தை விட பாதி கட்டணம் தான் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் எப்படி: சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தின் பதிவு எண் கொண்ட கார் உள்ளிட்ட வாகனங்கள்(வணிகமல்லாத வாகனங்கள்) வெறும் 340 ரூபாய்க்கு மாதாந்திர பாஸ் பெற்று பயணிக்க முடியும். இந்த சலுகை பெற விரும்புபவர்கள் ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், இந்த வாகனம் உங்களுக்கானது என்பதற்கான சான்றிதழ், டோல்பிளாசா அமைந்துள்ள மாவட்டத்திற்கு ரிஜிஸ்டர் செய்யப்பட்ட வாகனம் என்பதற்கான ஆர்சி புகல் நகல், உள்ளிட்டவற்றுடன், எல்ஆர்பி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்கள் ஊர் அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் அளிக்க வேண்டும்.

அதன்பிறகு நீங்கள் எத்தனை முறை வேண்டும் என்றாலும் பயணிக்கும் வகையில் மாதாந்திர பாஸ் கிடைக்கும். இந்த மாதாந்திர பாஸ் வெறும் 340 ரூபாய் ஆகும். இந்த 340 ரூபாய் மாதாந்திர பாஸ் பரனூர், ஆத்தூர் உள்பட எல்லா சுங்கச்சாவடிகளிலும் உள்ளது. அதை பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வொரு முறை சுங்கக்கட்டணத்தை உயர்த்தும் போது குறிப்பிட்டிருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+