ஆரம்பமே அக்கப்போரு.. இன்னும் கொடி பறக்கல.. அதுக்குள்ள திமுகவை பற்றி விஜய்யிடம் புகார்.. யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய், தன்னுடைய கட்சிக் கொடியை அறிமுகம் செய்த ஒரே நாளில், அடுத்தடுத்து சலசலப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.. இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் அரசியல் ஆரம்பமாகியிருக்கிறது.. இதுநாள்வரை மஞ்சள் வண்ணக்கொடியையே, தங்களது கட்சிக்கான கொடி என்று விஜய் ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர்..

Vijay DMK

ஆனால், நேற்று திடீரென மஞ்சள், அடர்சிவப்பு நிறத்தில் கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய். இதையடுத்து, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளுமே தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

சலசலப்பு: ஆனால், கட்சி கொடி குறித்த சலசலப்புகள் நேற்று முதல் வெடித்து வருகின்றன.. யானை சின்னம் இருப்பதை பார்த்து, பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. தேர்தல் ஆணையத்தையும் தற்போது நாடி இருக்கிறது. அதேபோல, வாகை பூவை பயன்படுத்தி இருப்பதற்கும் இன்னொரு குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. சமூக ஆர்வலர் ஒருவர், இன்றைய தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்.

இதனிடையே, தமாகா யுவராஜ் ஒருபடி மேலேபோய், இப்போதே ஒரு கோரிக்கையை விஜய் கட்சிக்கு விடுத்திருக்கிறார். திமுக ஆட்சிக் காலத்திலும் திரைத் துறையே முடங்கிப்போய் கிடப்பதால், தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வந்துள்ள விஜய் முதலில் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரைத் துறையை மீட்டு சிறப்பாக செயல்பட ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நேரடி அரசியல்: இதுதொடர்பாக தமாகா பொதுச்செயலாளர் எம்.யுவராஜா, "நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்து இன்று கட்சி கொடியை அறிமுகப்படுத்தி உள்ள அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நடிகர் விஜய் தான் கொண்ட லட்சியத்தில் உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வெற்றி வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

விஜய்க்கு வாழ்வு கொடுத்தது தமிழக திரையுலகம். இன்றுவரை தமிழக திரைத் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட முடியாமல் முடக்கப்பட்டுள்ளன.

திமுக குடும்பம்: 2006 முதல் 2011 வரை அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திரைத்துறை முடங்கியே இருந்தது. அதேபோல தற்போதைய திமுக ஆட்சிக் காலத்திலும் திரைத் துறை முடங்கிப்போய் உள்ளது. தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வந்துள்ள விஜய் முதலில் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரைத் துறையை மீட்டு சிறப்பாக செயல்பட ஆவண செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கட்சிக்கொடியை விஜய் அறிமுகப்படுத்தி இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை... அதற்குள் பரபரப்புகள் வெடித்து வருகின்றன.. மேலும், கட்சிக் கொடி விவகாரத்தில் அடுத்த என்ன செய்யலாம் என தமிழக வெற்றிக் கழகம் புதிய முடிவு எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நாள் பரபரப்பு: தேவைப்பட்டால், யானை சின்னம் குறித்து, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் பதில் அளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. அந்தவகையில், விஜய்யின் அரசியல் எப்படியிருக்க போகிறதோ என்ற ஆர்வம் ஒவ்வொருநாளும் எகிறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+