வீட்டில் பழைய தங்கம் இருக்கா? மொத்தமா லாபம் பார்க்க சரியான நேரமா? கோல்ட் குரு முக்கிய தகவல்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஓரளவுக்குக் குறைந்திருந்தாலும் கூட ஒப்பீட்டளவில் அது அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே வீட்டில் இருக்கும் பழைய தங்கத்தை விற்பது இந்த நேரத்தில் சரியாக இருக்குமா என்பது தொடர்பாக கோல்டு குரு சாந்த குமார் நமது ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இஸ்ரேல் ஈரான் போர் தொடங்கும்போது தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொடும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், வழக்கத்திற்கு மாறாகத் தங்கம் விலை குறைந்தது. சில நாட்களாகவே தொடர்ந்து தங்கம் விலை குறைந்தே வருகிறது. அதேநேரம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கடந்த ஓராண்டில் தங்கம் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி இருக்கிறது.

கோல்ட் குரு
போர் காலத்திலேயே உயராத தங்கம் இனி உயருமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் தங்கத்தை விற்கலாமா என்ற சந்தேகமும் வந்துள்ளது. இது தொடர்பாக கோல்டு குரு சாந்த குமார் சொல்லும் தகவல்களை நாம பார்க்கலாம்.
இது தொடர்பாக அவர் நமது ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், "எப்போதுமே போர் என்றாலே தங்கம் விலை உயரும். இந்த முறை இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒவ்வொரு நாளும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் பாஸ் ஆகும். ஆனால் இப்போது அதை எல்லாம் நிறுத்தி வைத்துள்ளனர். 15% மட்டுமே இப்போது அங்கிருந்து வெளியே வருகிறது.
தங்கம் சரிவது ஏன்?
இந்தச் சூழல் காரணமாகத் தங்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து முதலீடுகளை எடுத்து அந்த பக்கம் கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்கிறது. இதன் காரணமாகவே கச்சா எண்ணெய் விலை உயர்கிறது. தங்கம் விலை குறைகிறது. இந்த போர் தொடரும் வரை, கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கும் வரை தங்கத்தின் விலை குறையும். எல்லாம் முடிந்து இயல்பு நிலை திரும்பும்போது, தங்கம் விலை மெல்ல உயர ஆரம்பிக்கும்" என்றார்.
காத்திருக்க வேண்டுமா?
தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது காத்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு அவர், "எப்போதும் இப்படிக் காத்திருக்கக் கூடாது. இப்போது சில நாட்களாகத் தங்கம் குறைந்ததாக நாம் சொல்லலாம். ஆனால், இதுவே குறைந்த விலை கிடையாது. பிப்ரவரி மாதம் ரூ.1.14 லட்சத்திற்குத் தான் இருந்தது. பிறகு அது ரூ.1.25 லட்சம் வரை உயர்ந்து பிறகு, இப்போது குறைந்து இருக்கிறது. இன்னும் குறையுமா என நாம் யோசித்து முடிப்பதற்குள் அடுத்த வாரமே தங்கம் விலை ரூ.1.35 வரை போய், பிறகு ரூ.1.30ல் வந்து நிற்கும்.
தங்கம் விலை எப்போதும் இப்படி தான் இருக்கும். எனவே, இப்போது குறைந்து இருக்கிறது. இதை வாங்குவது சரியாக இருக்கும் என்றே நாம் யோசிக்க வேண்டும்.. சில வாரங்களில் எல்லாம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 லட்சத்தைத் தொடாது. ஆனால், சில மாதங்களில் தாண்டும். ஈரானை இவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள். ஒரே நாளில் ஈரானை காலி செய்து சுட்டு வீழ்த்திவிடலாம் என நினைத்தனர். அது எல்லாமே மாறிவிட்டது. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதான் போர் இழுத்துக் கொண்டே போகிறது" என்றார்.
பழைய தங்கம்
வீட்டில் இருக்கும் பழைய தங்கத்தை விற்கலாமா என்ற கேள்விக்கு அவர், "தங்கத்தில் வந்த லாபத்தை புக் செய்யப் போகிறேன். அதை வேறு விஷயத்தில் முதலீடு செய்யப் போகிறேன் என்றால் தாராளமாக விற்கலாம். ஆனால், எதுவுமே இல்ல. நான் சும்மாதான் வைத்திருக்கப் போகிறேன் என்றால்.. அதற்குப் பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கலாமே. அது ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. அடுத்த ஓராண்டிலேயே குறைந்தது 30% வரை தங்கம் விலை உயர வாய்ப்பு இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications