Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களுக்கு இதுதான் புத்தாண்டு பரிசா? திமுக அரசை சீண்டிய அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை : தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், கொரோனா தொற்று தீவிரமாகப் பரவிய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியில் சேர்க்கப்பட்ட சுமார் 6000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தங்கள் உயிரை துச்சமாக கருதி பணிசெய்த செவிலியர்களுக்கு திமுக அரசு கொடுத்த புத்தாண்டு பரிசை பாருங்கள் என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று அரசாணை வழங்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், உடனடியாக 6000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்பட வேண்டும். தவறினால், அவர்களுக்காக தமிழக பாஜக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

6000 செவிலியர்கள்

6000 செவிலியர்கள்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா பெருந்தொற்று நம்மை ஆட்டிப்படைத்த காலத்தில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தொய்வின்றி உழைத்து நோய் தொற்று உள்ளவர்கள் குணமடைய அயராது பாடுபட்டவர்களில் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. கொரோனா பெருந்தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி செய்ய செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் 14000 ரூபாய் மாத சம்பளத்திற்கு சுமார் 6000 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

திமுக அளித்த வாக்குறுதி

திமுக அளித்த வாக்குறுதி

6 மாத காலத்திற்கு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கான ஆணை கொரோனா தொற்று பெருகிவந்த காரணத்தால், 31-12-2022 வரையில் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 356ல், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

நல்ல செய்தி வரும் என்றார் முதல்வர்

நல்ல செய்தி வரும் என்றார் முதல்வர்

இதற்குமுன் பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம் நடத்தியபோது, பணி நிரந்தரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் "விரைவில் நல்ல செய்தி வரும்" என்றார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். புத்தாண்டு தினத்தன்று பணி நிரந்தர ஆணை வரும் என்று எதிர்பார்த்திருந்த 6000 செவிலியர்களுக்கு இடியாக வந்து இறங்கியது சுகாதாரத்துறையின் அரசாணை. 31.12.2022க்கு பிறகு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புத்தாண்டு பரிசை பாருங்கள்

புத்தாண்டு பரிசை பாருங்கள்

தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றுவார்களா என்ன? தங்கள் உயிரை துச்சமாக கருதி பணிசெய்த செவிலியர்களுக்கு திறனற்ற திமுக அரசு கொடுத்த புத்தாண்டு பரிசை பாருங்கள். உடனடியாக 6000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்பட வேண்டும். தவறினால், அவர்களுக்காக தமிழக பாரதிய ஜனதா கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+