பாபநாசம் கோயில் அறங்காவலராக இஸ்லாமியரா? உண்மை என்ன? தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் உள்ள இராஜகோபால சுவாமி கோயிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்ற இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் பரவி வந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தரப்பில் உண்மை என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் பழமைவாய்ந்த ராஜகோபால பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் தரப்பில் ராஜகோபால பெருமாள் கோயிலுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

கோயில் அறங்காவலர் குழு தலைவராக மணி, வசந்தி மற்றும் நர்கீஸ் கான் ஆகிய 3 பேரும் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின் கோயில் செயல் அலுவலர் பார்த்திபன், கோயில் ஆய்வாளர் லட்சுமி, கோயில் கணக்கர் கோபி கிருஷ்ணன் மற்றும் கிராமவாசிகள் முன்னிலையில் அறங்காவலர்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்றது.
இதனிடையே கோயில் அறங்காவலர்களில் ஒருவராக நர்கீஸ் கான் நியமனம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சோசியல் மீடியாவில் ஏராளமான இந்துமத அமைப்புகள் கோயில் அறங்காவலராக இஸ்லாமியரான நர்கீஸ் கான் என்பவரை எப்படி நியமனம் செய்யலாம் என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது அந்த பகுதியிலும் விவாதமாக மாறியது.
இந்த நிலையில் கோயில் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவருமே இந்துகள் என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ராஜகோபால பெருமாள் கோயிலும் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள நர்கீஸ் கான் இஸ்லாமியர் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நர்கீஸ் கானின் தந்தை பெயர் தங்கராஜ். மிகவும் சிக்கலான நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவரான நர்கீஸ் கானின் பெயரையே தனது மகனுக்கு தங்கராஜ் சூட்டியுள்ளார். இதனை கோயிலின் செயல் அலுவலரான பார்த்திபன் உறுதி செய்திருக்கிறார். இதனால் பாபநாசம் கோயில் அறங்காவலராக இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது பொய் என்பதும் நிரூபணமாகியுள்ளது. இந்த சம்பவம் மதநல்லிணத்திற்கும், நன்றி மறவாமைக்கு எடுத்துக் காட்டாகவும் அமைந்துள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications