1 சொல்.. அசிங்கப்படுத்திய அமித்ஷா.. ஸ்டாலின் காதுக்கு போன மேட்டர்.. மேஜர் முடிவெடுக்கிறார் முதல்வர்
சென்னை: செந்தில் பாலாஜி விஷயத்தில், முதல்வர் ஸ்டாலின் விரைவில் ஒரு முடிவு எடுக்கப் போவதாக சொல்கிறார்கள்.. அதுகுறித்த ஒரு முக்கிய தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால் செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி பிறகு அதனை நிறுத்தி வைத்தார் கவர்னர்.

இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதை எதிர்த்தும், கவர்னரின் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியும் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்எல் ரவி என்பவரும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் மற்றும் முன்னாள் எம்பியுமான ஜெயவர்த்தனும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதிகாரிகள்: இந்த வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான முதல் பெஞ்ச் விசாரித்து வருகிறது. நேற்று இது தொடர்பாக நடந்த விசாரணையின்போது, அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, "ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதினாலேயே அவர் அமைச்சராக நீடிக்க அரசியலமைப்பு சட்டம் தடை விதிக்கவில்லை. கவர்னர் தனது தனிப்பட்ட முறையில் அதிகாரத்தை செலுத்தமுடியாது. அதனால் இந்த வழக்கு விசாரணைக்கே உகந்ததில்லை" என்று வாதிட்டார்.
ஆனால், எதிர்தரப்பில் ஆஜராகிய சீனியர் வழக்கறிஞர்கள், "அமைச்சர் பதவி வகிக்க ஒருவர் தகுதியில்லை என்று கருதினால் அவரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு உண்டு. மேலும், முதல்வரின் கவனத்துக்கு தெரிவித்து விட்டுத்தான், இந்த முடிவை எடுத்திருக்கிறார் கவர்னர்...
இலாகா: கைது செய்யப்பட்ட அமைச்சரும் சிறையில் இருக்கிறார். அவர் எப்படி பணியாற்ற முடியும்? இலாகா இல்லாவிட்டாலும் அரசின் அத்தனை சலுகைகளும் அவருக்கு கிடைக்கிறது. மக்கள் பணத்தில் அனுபவிக்கிறார்கள். அதனால் கண்முன்னே நடக்கும் சட்ட விரோதங்களை பார்த்துகொண்டு கவர்னர் அமைதியாக இருக்க முடியாது. அதனால் அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜி நீக்கப்பட வேண்டியவர்" என்று வாதாடினார்கள்.
அவர்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய சொல்லிவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில், "பொது மக்களின் பணம் விரயமாகிறது" என்கிற பாயிண்ட், இப்போது பொதுவெளியில் பேசுபொருளாகி வருகிறது. இதனை உளவுத்துறையினர் முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கின்றனர். சட்டரீதியாக ஒருவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருக்க முடியும் என்றாலும், தார்மீக அடிப்படையில் அது சரியில்லை என்று படித்தவர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இருப்பதையும் ஸ்டாலினிடம் சொல்லி வருகிறார்களாம்.
கலைஞரின் பேனா: ஏற்கனவே, கலைஞரின் நினைவாக பேனா சின்னத்தை கடலில்தான் வைக்க வேண்டுமா? நினைவிடத்தில் வைத்தால் அவரது பெருமை குறைந்து போகுமா? அப்படியே வைக்கிறதாயின் திமுக அறக்கட்டளை பணத்தில் செலவு செய்ய வேண்டியதுதானே? மக்களின் வரிப்பணத்தை எப்படி செலவு செய்யலாம்? என்றெல்லாம் சர்ச்சைகள் இருக்கும் நிலையில், மக்களின் பணத்தை செலவிட்டு செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என்கிற சர்ச்சை இப்போது பொதுவெளியில் வெடித்துள்ளது.
வெளிப்படையான நிர்வாகத்தை தருவதாக சொல்லும், உங்கள் தலைமையிலான அரசுக்குதான் கெட்டப்பெயரை தான் உருவாக்கும் . இனி நீங்கள் தான் யோசிக்க வேண்டும்" என்று சீனியர் அமைச்சர்கள் சிலரும் ஸ்டாலினிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், அண்ணாமலையின் நடைப்பயணத் துவக்க விழா பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவும், செந்தில்பாலாஜி விவகாரத்தை சுட்டிக்காட்டி, "ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா?" என்று கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார்.
செந்தில் பாலாஜி: ஆக, செந்தில் பாலாஜி விவகாரத்தில் எழும் சட்டப்பிரச்சனை + பொதுவெளியில் நடக்கும் விமர்சனம் + அமித்ஷாவின் கடுமையான வார்த்தை பிரயோகம் என மூன்று கோணங்களையும் ஆராய்ந்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். அதனால் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கிடலாமா? என்கிற யோசனைக்கும் வந்திருப்பதாக சொல்கிறார்கள்..
சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி, "என்னை மையப்படுத்தி தலைவருக்கு (ஸ்டாலின்) ஏற்படும் சங்கடங்கள் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்..
ஏற்கனவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருக்கிறேன். அதை தலைவர் ஏற்க வேண்டும்" என்று சிறைத்துறை அதிகாரிகள் மூலம் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தியுள்ளாராம் செந்தில் பாலாஜி.. தேவைப்பட்டால் கடிதம் கூட எழுதுகிறேன்" என்று சொல்கிறாராம் செந்தில்பாலாஜி.
விமர்சனம்: இதனிடையே, சில விவகாரங்களை தன்னுடைய குடும்பத்தினரிடமும் முதல்வர் ஸ்டாலின் விவாதித்தாராம்.. குறிப்பாக, செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம்கோர்ட்டும் உத்தரவு பிறப்பித்து விட்டால், அப்போது செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது பெரிதும் விமர்சிக்கப்படும் என்றும், அது தனது நேர்மையான அரசு நிர்வாகத்தையும் அரசியலையும் கேள்விக்குறியாக்கினால், தன்னுடைய இமேஜ் சரியும் தானே என்றும் விவாதித்தாராம் ஸ்டாலின்.
செந்தில் பாலாஜி: செந்திபாலாஜிக்கு எதிரான வழக்குகளில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்புகளை வழங்குமா? சாதகமான தீர்ப்புக்கு 1 சதவீதம் வாய்ப்பிருந்தாலும் சட்டரீதியாக மோதிப்பார்க்கலாம். இல்லையெனில் வேறு முடிவைத்தான் எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்களிடம் சொல்லியிருக்கிறாராம் ஸ்டாலின்.. இதனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவை எடுக்க விருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய தரப்பினர்.












Click it and Unblock the Notifications