ஸ்டாலின் வெளிநாடு பயணம்.. இன்னும் 4 நாட்களில் பொறுப்பு முதல்வராகும் உதயநிதி? பரபர முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது.

இந்த மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜன.28ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயினை தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு செல்கிறார்; 600க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

Is Udhayanidhi Stalin becoming the new acting CM of Tamil Nadu amid Stalin foreign trip?

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக கூறப்படுவது வதந்தி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

லோக்சபா தேர்தலுக்கு முன் கொடுத்தால் தேர்தல் நேரத்தில் அது பெரிய பிரச்சனை ஆகும். முக்கியமாக பாஜகவிற்கு அவல் கொடுத்தது போல ஆகிவிடும். அதிலும் சனாதன விவகாரத்தில் ஏற்கனவே பாஜக உதயநிதி மீது கோபத்தில் உள்ளது.

திமுகவில் பொதுவாக ஒரு வழக்கம் உண்டு. மேல் பதவிக்கு வர வாரிசாக இருந்தாலும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் உதயநிதிக்கு லோக்சபா தேர்தலில் வெல்ல வாய்ப்பும் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளதாம். அதை நிறைவேற்றினால் பதவி கிடைக்கும் என்கிறார்கள்.

அமைச்சர்கள் மீதான வழக்குகள் பிப்ரவரி மாதம் வரும் அப்போது பல விமர்சனங்கள் வைக்கப்படும். அதோடு இந்த விமர்சனமும் வைக்கப்பட வேண்டாம் என்பதால் இப்போதைக்கு உதயநிதியை துணை முதல்வருக்கும் முடிவை எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாகவே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படவில்லை.

பொறுப்பு: இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஸ்டாலின் வெளிநாடு செல்வதால் தமிழ்நாட்டில் பணிகளை ஒருவர் கவனிக்க வேண்டும்.

10 நாட்கள் அவர் இருக்க மாட்டார் என்பதால் சட்ட ஒழுங்கு தொடங்கி பல்வேறு பணிகளை கவனிக்க வேண்டும். அதற்கு நம்பிக்கையான ஒருவர் தேவை. அதனால் உதயநிதி ஸ்டாலினை பொறுப்பு முதல்வராக நியமித்துவிட்டு செல்ல ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.

இதற்காக அமைச்சரவை கூட்டத்திலும் அமைச்சர்களிடம் ஆலோசனைகளை பெற்று உள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர்கள் இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

உதயநிதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர்தான் முடிவு எடுப்பார் '' என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப் பட்டிருக்கிறது.

அப்போதெல்லாம், எனக்கே தெரியாத விசயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. இதையெல்லாம் உங்களுக்கு யார் சொல்கிறார்கள்.. எனக்கு அப்படி எதுவும் தகவல் வரவில்லையே.. உங்களுக்கு யார் இது போன்ற தகவல்கள் வருகின்றன.. எனக்கு அப்படி தெரியவில்லையே ? '' என்கிற ரீதியில் மறுத்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

துணை முதல்வர் : ஆனால், இந்த முறை அப்படி எதுவும் மறுக்காமல், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று சொல்லி உள்ளார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லியிருப்பதன் மூலம், துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+