மாஸ்டர்பிளான்.. உதயநிதி வெளியிடும் மெகா அறிவிப்பு? பொங்கலுக்கு வரப்போகும் குட்நியூஸ்! நாளையே முடிவு?
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்படும் நலத்திட்ட அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாடு அமைச்சராக கடந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். முன்னதாக முதல்வர் ஸ்டாலினிடம் பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் இருந்தன.
இதில் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை முதல்வரிடம் இருந்தது. இந்த துறைதான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் கைக்கு இந்த துறை சென்றுள்ளது. இந்த துறையை வைத்து இருக்கும் அமைச்சர்.. எந்த துறைக்கு கீழ் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும். உதாரணமாக கல்வித்துறை அமைச்சர் போக்குவரத்து துறையில் அறிவிப்புகளை வெளியிட முடியாது.

அறிவிப்பு
ஆனால் இந்த சிறப்பு திட்ட செயலாக்க துறையை கையில் வைத்து இருக்கும் அமைச்சர் எந்த துறையில் வேண்டுமானாலும் சிறப்பு திட்டங்கள் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிட முடியும். ற்ற துறைகளுடன் இந்த துறை அமைச்சர் (முதல்வர்) இணைந்து செயல்படுவார்.தற்போது முதல்வரிடம் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த துறை சென்றுள்ளது. இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் செயல்படுதப்படும் "சிறப்பு" திட்டங்களை கண்காணிக்க முடியும். அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்பது தொடர்பாக இந்த துறை ஆலோசனைகளை வழங்க முடியும். உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட முடியும்.

சிறப்பு அறிவிப்பு
அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசு பொருட்கள் தொடர்பான அறிவிப்பை இந்த முறை உணவு வழங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிடாமல் பெரும்பாலும் சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சர் என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பு பரிசு பொருட்கள் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. கடந்த வருடம் வழங்கப்பட்டது போல சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படும். இந்த அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் வெளியிட வாய்ப்புகள் உள்ளன.

பணம்
இது போக 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற தகவலும் பரவி வருகிறது. ஆனால் தமிழ்நாடு பொருளாதாரம் இப்போதுதான் மீண்டு வருவதால் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. இந்த பொங்கல் இல்லாமல் அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த பணம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த முறை சிறப்பு பரிசு பொருட்களில் மளிகை பொருட்களின் அளவு அதிகமாக இருக்கும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. இந்த அமைச்சரவாய் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications