தெறி, தீரன் படங்களின் "நிஜ ஹீரோ.." தற்கொலை செய்த டிஐஜி விஜயகுமார் பற்றி பலரும் அறியாத தகவல்கள்
சென்னை: நேற்று தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமார் விசாரித்த ஒரு வழக்கின் கதையை தழுவியே விஜய் நடித்த தெறி திரைப்படம் இயக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், "இன்று 07.07.2023-ம் தேதி காலையில் D. இராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் ஆகிய நான் நிலைய அலுவலில் இருந்தபோது கிடைத்த தகவலின் பேரில் காலை 07.00 மணிக்கு CMC மருத்துவமனை சென்றும் மேற்படி CMC மருத்துவனையில் இருந்த வாதி யு.ரவிச்சந்திரன் ( வயது 35 ), ஈரோடு மாவட்ட ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் என்பவரிடமிருந்து பெற்ற எழுத்து மூலமான புகாரின் விபரம் பின்வருமாறு. 'அய்யா, நான் ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறேன்.

என்னுடைய முதல் நிலைக் காவலர் எண் 297. நான் 2011-ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தேன் 2016 ஆம் ஆண்டு முதல் கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்களுக்கு தனிப்பாதுகாப்பு காவலராக (GEN MAN) பணிபுரிந்து வருகிறேன். எனக்கு கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அலுவலுக்காக கோவை மாவட்ட ஆயுதப்படையிலிருந்து SUTT NO 183 என்ற 9 MM PISTOL வழங்கப்பட்டுள்ளது.
நேற்று 06.07 2023 ஆம் தேதி நான் அலுவலாக சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். அய்யா அவர்களுடன் குடும்பத்துடன் வெளியே போய்விட்டு இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டோம். அய்யா அவர்கள் கோவை சரகத்திற்கு ஜனவரி மாதம் வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று மாத்திரை எடுத்துக்கொள்வார். நான் முகாம் அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே தங்கியிருந்தேன்.
வழக்கம்போல் எப்போதும் அய்யா அவர்கள் காலை 07.00 மணிக்கு DSR பார்ப்பதற்காக கீழே உள்ள DSR ROOMக்கு வருவார். இன்று 07.07.2023-ம் தேதி 06.30 மணிக்கெல்லாம் அய்யா கீழே வந்துவிட்டார். முகாம் அலுவலகத்தில் அலுவலில் இருந்த காவலர் ரவி வர்மாவிடம் குடிப்பதற்கு பால் கேட்டார். அவர் உடனே பால் காய்ச்சிக் கொடுத்தார். பின்பு காலை 06:40 மணியளவில் பாலை குடித்துவிட்டு நான் தங்கியிருக்கும் அறைக்கே அய்யா வந்து DSR கேட்டார். நான் DSR எடுத்துக்கொடுத்தேன்.
அப்போது நான் தங்கியிருந்த அறையில் நான் எப்போதும் போல் PISTOL வைத்திருக்கும் இடத்திற்கு சென்று என்னுடைய PISTOL லை எடுத்தவர் இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று என்னிடம் பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே சென்றார். நான் TSHIRT போட்டுட்டு வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் அறையில் இருந்த CAMP OFFICE டிரைவர் அன்பழகனும் வெளியே ஓடி வந்து பார்த்தோம்.
அப்போது அய்யா அவர்கள் மல்லாந்த நிலையில் தலையில் இரத்த காயத்துடன் கிழே விழுந்து கிடந்தார். PISTOL அங்கேயே கிடந்தது. அம்மாவுக்கு தகவல் சொல்வதற்காக அன்பழகனும் நானும் சத்தம் போட்டுக்கொண்டே மேலே ஓடினோம். எங்களது சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்தவர் என்ன என்று கேட்டார்கள் நாங்கள் வியரத்தை சொல்ல எங்களுடன் அம்மாவும் ஓடி வந்து அய்யா கிடந்ததை பார்த்து உடனடியாக முகாம் அலுவலகத்தில் இருந்த பொலிரோ வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சுமார் 7 மணியளவில் கொண்டு வந்து சேர்த்தோம்.
எங்களுடன் SENTRY காவலர் ஸ்ரீநாத் உடன் இருந்தார். அய்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் DIG அய்யா இறந்துவிட்டதாக தகவல் சொன்னார்கள். மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயர் அதிகாரிக்களுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தேன். என்ன காரணத்திற்காக அய்யா சுட்டு கொண்டார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்படி புகாரினை பெற்று காலை 07:30 மணிக்கு நிலையம் வந்து அப்புகாரின் தன்மைக்கேற்ப D1 இராமநாதபுரம் காவல் நிலைய குற்ற எண்:219/2023 U/S 174CP யின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. (FIR-ன் அசலுடன் வாதியின் புகார் மனுவையும் இணைத்து கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் VI கோவை அவர்களுக்கும் இதன் நகல்களை சம்மந்தப்பட்ட உயர் காவல் அதிகாரிகளுக்கு அனுப்பியும், இதன் ஒரு நகலை புலன்விசாரணைக்காக போத்தனூர் சரக காவல் உதவி ஆணையர் டாக்டர் S.கரிகால் பாரிசங்கர் அவர்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமார் விசாரித்த வழக்கின் அடிப்படையிலேயே விஜய் நடித்த தெறி படம் உருவானதாக கூறப்படுகிறது. ஆம், தெறி படத்தில் நடிகர் விஜய் விஜய்குமார் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பார். 2014 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த சிறுசேரியில் பெண் ஐடி ஊழியர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை விசாரித்தவர் விஜயகுமார்தான். அதில் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை விஜய்குமார் கைது செய்தார்.
அதன் அடிப்படையிலேயே தெறி படத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளியை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்ததாகவும், அவரது பெயரையே விஜய்க்கு வைத்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால், தெறி படம் முழுக்க முழுக்க விஜய்குமாரின் கதை இல்லை. வழக்கு விசாரணையும் முழுக்க முழுக்க அப்படியே காட்சிப்படுத்தப்பட்டு இருக்காது. சாதாரண தழுவல்தான் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்டப்படும் பவாரியா கொள்ளையர் வழக்கை விசாரிக்கும் குழுவிலும் விஜய்குமார் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்












Click it and Unblock the Notifications