வெறும் 75 ரூபாய் போதும்..உங்கள் வீட்டு போர்வெல் தண்ணீர் நல்லதா? சென்னை குடிநீர் வாரியம் சூப்பர் சேவை
சென்னை: வெறும் 75 ரூபாய் போதும், உங்கள் வீட்டு போர் தண்ணீர் எப்படி இருக்கிறது? பயன்பாட்டிற்கு உகந்ததா என்பதை ஆய்வு செய்து தருகிறது சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம். இதைபற்றி முழு விவரத்தை பார்ப்போம்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய 5 நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினமும் 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தினமும் 300 முதல் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து இந்த குடிநீரின் தரம் ஆய்வு செய்தும் வருகிறது. ஏராளமான இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து,குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவையெல்லாம் மாநகராட்சியால் வழங்கப்படும் குடிநீரை பரிசோதிப்பதற்கு மட்டும் தான்
இது இல்லாமல் உங்கள் வீட்டு போர்களில் வரும் தண்ணீரின் தரம் குறித்து சென்னை குடிநீர் வாரியத்தில் மாதிரியை அளித்து பரிசோதனை செய்ய முடியும். புதிதாக கட்டிடம் கட்ட போகிறவர்களும் உங்கள் போரில் வரும் நீரினை ஆய்வு செய்ய முடியும். எப்படி என்பதை பார்ப்போம்.
சென்னை கீழ்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரியத்தின் நீர் மற்றும் கழிவுநீர் பரிசோதனை ஆய்வகம் செயல்படுகிறது. சென்னை கீழ்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் அவென்யூ, ஆஸ்பிரின் கார்டன் காலனியில் இயங்கி வருகிறது.
இங்கு உங்கள் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றின் நீரினை இங்கு கீழ்கண்ட பயன்பாடுகளுக்காக பகுப்பாய்வு செய்து தரப்படும்.ஒவ்வொரு நீர்மாதிரியும், புதிய வெள்ளை நிற கேனில் கீழ்கண்ட அளவு எடுத்து வர வேண்டும்.
குடிப்பதற்கான அளவு இரண்டு லிட்டராக இருக்க வேண்டும். தனிநபர் பயன்பாடு என்றால் ( உங்கள் ஒரு வீடு அது தனிவீடு என்றால்) 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அடுக்குமாடி மற்றும் வணிக பயன்பாடு என்றால் ரூ.200 ஆகும். புதிதாக கட்டிடம் கட்டுவதற்கான ஆய்வு செய்ய வேண்டும் என்றால் 5 லிட்டர் தண்ணீர் எடுத்து வர வேண்டும். இதற்கு ரூ.200 கட்டணம் ஆகும். இதை எடுத்து வந்து ஒப்படைத்தால் உங்கள் வீட்டு அல்லது கட்டிடத்தின் போர்வெல் தண்ணீரின் தரம் குறித்து 15 நாட்களில் ஆய்வறிக்கையை சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் தரும்.பணம்பெற்றுக் கொள்ளும் நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே,. வேலை நாட்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்படுகிறது.
உங்கள் வீட்டு போர்களில் வரும் தண்ணீரின் தரம் குறித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிதாக அறியலாம். அதேபோல் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர், கட்டிடம் கட்டுவோரும் அந்த இடத்தின் நீரின் தரத்தை எளிதாக அறியலாம்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications