இலக்கை நெருங்கிய ஆதித்யா எல்-1.. தேதி குறித்த இஸ்ரோ தலைவர்.. இனி இந்தியாதான் டாப்
பெங்களூர்: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்திருக்கிறார். சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் ஆதித்யா எல்-1 என்பதால் அது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
சூரியன்: பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் சூரியன் இருக்கிறது. என்னதான் இவ்வளவு தொலைவில் இருந்தாலும் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு இதன் ஒளி அவசியமாக இருக்கிறது. சிம்பிளாக சொல்வதெனில், மனிதர்கள் காய்கறிகளையும், இறைச்சியையும் சாப்பிடுகிறார்கள். காய்கறிகள் செடி, மரத்திலிருந்து நமக்கு கிடைக்கிறது. செடி, மரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் வளர்கிறது. இதற்கு சூரிய ஒளி முக்கியம். சூரியன் மிக மிக முக்கியம். எனவே நாம் சூரியனுடன் தொடர்ந்து கனெக்டிங்கில் இருக்க வேண்டியது அவசியம்.

ஏன் சூரியன் அவசியம்: ஒளிச்சேர்க்கை எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் மறைமுகமாக சூரியன் பல்வேறு வகையில் நமக்கு உதவிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை சூரியன் இல்லையெனில், நம்முடைய பூமி இந்த சூரிய குடும்பத்தை விட்டு விலகி விண்வெளியில் காணாமல் போய்விடும். இப்படி நடந்தால் உடனடியாக நமது உலகம் அழிந்துபோய்விடும். ஆக இப்படியாக சூரியன் தனக்காக வாழ்வதை விட பூமிக்காகவே அதிகமாக வாழ்ந்து வருகிறது. ஆனால் இப்படி சமத்து பிள்ளையாக இருக்கும் இது, பல நேரங்களில் (சூரிய) குடும்பத்தையே இரண்டாக பிளக்கும் வேலைகளை செய்துவிடுகிறது.
காந்த புயல்: அதாவது குறிப்பிட்ட சில நேரங்களில் சூரியனிலிருந்து காந்த புயல்கள் வெளி வருகின்றன. இந்த புயல் பூமியை தொட்டால் சோலி முடிஞ்ச்! இந்த காந்த புயல்கள் மின்னணு சாதனங்களை முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். இதுமட்டும் கிடையாது, இந்த புயலிலிருந்து ஒரேயொரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எல்லாம் பூமியை நோக்கி 'தொப்' என விழுந்துவிடும். எங்கு விழுகிறது என்பதை கணிக்கவே முடியாது.
ஆய்வு ஏன்?: ஆக இந்ந புயல்களை முன் கூட்டியே கணிக்க உலக நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அமெரிக்க சூரியனுக்கு மிக நெருக்கமாக செயற்கைக்கோளை ஏவி ஆய்வு செய்து வருகிறது. இந்த விஷயத்தில் நமது இஸ்ரோ இந்த ஆண்டுதான் அ, ஆ-வை போட்டு கணக்கை தொடங்கியிருக்கிறது. அதாவது சூரியனை ஆய்வு செய்ய நாம் முதன் முதலில் தற்போதுதான் ஆதித்யா எல்-1 எனும் விண்கலத்தை அனுப்பியிருக்கிறோம். இது சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுகளை தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கான இடம்: ஆதித்யா எல்1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில், சூரியனை பார்த்தவாறு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இது தற்போது சூரியனை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்திய விஞ்ஞானிகள் சூரியனை தொலை நோக்கி மூலமாகதான் இதற்கு முன்னர் புகைப்படமாக எடுத்திருக்கிறார்கள். நம் வசம் இருக்கும் சூரியன் குறித்த புகைப்படங்கள் அனைத்தும் மற்ற நாடுகளின் ஸ்பேஸ் ஏஜென்சிகள் மூலம் கிடைத்தவை. ஆனால் தற்போது முதல் முறையாக சூரியனை நெருக்கத்தில் வைத்து இந்திய விஞ்ஞானிகள் தெளிவான புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்திய விண்வெளி வரலாற்றில் இது அரிய தருணம்.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 எப்போது அதன் நிலை புள்ளியை சென்று சேரும் என்று கேள்விகள் எழுந்தன. இதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார். அதாவது, "ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ஆம் தேதி லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும்" என்று கூறியுள்ளார்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications