அடித்து ஆடுதே இஸ்ரோ! விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்.. தொடங்குது எஸ்கேப் பேட் சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரோ ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இதற்காக இஸ்ரோ இப்போதே முக்கியமான பணிகளை தொடங்கி உள்ளது.

இஸ்ரோ தற்போது வின்னிங் ஸ்ட்ரீக்கில் உள்ளது. வரிசையாக அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது. முதலில் சந்திரயான் 3 வெற்றி.. அடுத்து ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் ஆதித்யா எல்1 தற்போது சூரியனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

ISRO Mission Gaganyaan: India to starts its escape pad test in 2-3 weeks

இது வெற்றிகரமாக ஏற்கனவே பூமி வட்டப்பாதையை முடித்துக்கொண்டு சூரியனின் எல் 1 பாயிண்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்துக்கொண்டு இருக்கும் நிலையில்தான் இஸ்ரோ மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இதற்காக இஸ்ரோ இப்போதே முக்கியமான பணிகளை தொடங்கி உள்ளது.

முக்கியமான திட்டம்: அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இஸ்ரோவும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப முடிவெடுத்து உள்ளது.

இஸ்ரோவின் இந்த திட்டத்திற்கு ககன்யான் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் விண்வெளியில் சென்று இந்திய வீரர்கள் மூலம் ஆராய்ச்சி நடத்தப்படும். ஆனால் விண்ணில் எங்கு சென்று ஆராய்ச்சி செய்வார்கள் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இதன் மூலம் இந்தியா முதன்முதலாக மனிதர்களை சுயமாக விண்ணுக்கு அனுப்ப உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 3 பேரை விண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் 3 பேர் ஏழு நாட்கள் விண்ணில் இருப்பார்கள். ஏழு நாட்கள் அவர்கள் விண்ணில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். யாரை விண்ணுக்கு அனுப்ப போகிறார்கள் என்பது குறித்தும் இவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

இதற்கான தேர்வுதான் தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கான புகைப்படத்தை தற்போது இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படை வீரர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ சோதனை தற்போது நடந்து வருகிறது.

ஆராய்ச்சி: இவர்களை விண்ணுக்கு அனுப்பும் பட்சத்தில் எஸ்கேப் பேட் மூலம் அவர்களை பூமிக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். அதாவது ராக்கெட்டின் கூம்பில் இந்த எஸ்கேப் பேட் இருக்கும். இது மீண்டும் விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு பூமிக்கு திரும்பும்.

அதன்படி 2-3 வாரங்களில் ககன்யான் பயணத்தின் குழு தப்பிக்கும் சோதனையை இஸ்ரோ நடத்த உள்ளது, மூன்று நாள் பயணத்திற்காக மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு இந்த எஸ்கேப் பேட் கொண்டு செல்லப்பட்டு அதன் பின் பூமிக்கு வெற்றிகரமாக மீண்டும் கொண்டு வரப்படும்.

பூமியின் வட்டப்பாதைக்கு வெளியே சென்று மீண்டும் இது வெற்றிகரமாக பூமிக்கு வருகிறதா என்று சோதனை செய்யப்படும்.

சோதனை: இன்னொரு பக்கம் பெங்களூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் அமைப்பில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் ரஷ்யாவில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படுவார்கள். அதன்பின் இவர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். ரஷ்யாவில் லியாசான் பயிற்சி மையத்தில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+