16 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி.. இஸ்ரோவுக்கு இரண்டாவது பின்னடைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி போன்றவற்றுக்கு இணையாக இந்தியாவின் விண்வெளி ஆய்வு துறையான இஸ்ரோ சிறப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சியின் மேலும் ஒரு சாதனையாக, இன்று 16 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்த இருந்தது. ஆனால் எதிர்பார்க்காத விதமாக இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

பாதுகாப்பு, புவி கண்காணிப்பு உட்பட 16 செயற்கைக்கோள்களை சுமந்துக்கொண்டு, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட், இன்று காலை 10.14 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. மொத்தம் 4 கட்டங்கள் கொண்ட இந்த மிஷனில் மூன்றாவது கட்டத்தில் மிஷன் தோல்வியடைந்துள்ளது.

ISRO India

என்னென்ன செயற்கைக்கொள்கள்?

16 செயற்கைக்கோள்களில் மிகவும் முக்கியமானது, 'ஈஓஎஸ்-என்1' எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்தான். இதற்கு 'அன்வேஷா' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது ராணுவம் சார்பில், விண்வெளியில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா போல செயல்படும். முழுக்க முழுக்க பாதுகாப்பு துறைக்காகவே இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு அம்சம்

இதில் உள்ள 'ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங்' தொழில்நுட்பம், நிலப்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அல்லது ராணுவ நடமாட்டத்தை துல்லியமாக தெரிந்துக்கொள்ள உதவும். எனவே எல்லை பாதுகாப்புக்கு இந்த செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்பெயின் செயற்கைக்கோள்

இத்துடன் சேர்த்து வெளிநாடுகளை சேர்ந்த மற்ற செயற்கைக்கோள்களையும், இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்துகிறது. தவிர, இந்த ஏவுதலில் வேறு சில சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன. அதாவது இந்தியா, முதன் முறையாக விண்வெளியில் செயற்கைக்கோளுக்கு எரிபொருள் நிரப்பும் சோதனையை செய்கிறது. அதேபோல MOI-1 எனும் மற்றொரு செயற்கைக்கோளும் விண்ணில் இன்று ஏவப்படுகிறது. இது விண்வெளியில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தகவல்களை சேகரிக்கும்.

இஸ்ரோவுக்கு இது முக்கியம்

KID என்படும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் செயற்கைக்கோள் ஒன்றும் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இது விண்வெளியிலிருந்து மீண்டும் பூமிக்கு திரும்பும் சோதனையை செய்ய இருந்தது.

பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கு இது 64வது பயணமாகும். கடந்த ஆண்டு, பிஎஸ்எல்வி ராக்கெட் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் ஏவுதலை நிறுத்தியிருந்தது. எனவே இந்த ஏவுதல் வெற்றி வெற வைப்பது இஸ்ரோவுக்கு முக்கியமானதாகும். ஆனால் மிஷன் தோல்வியடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+