இங்க பாருங்க.. டாஸ்மாக் சேல்ஸ் 25% குறைந்து போச்சாம்.. அதிகாரிகள் அலெர்ட்! பின்னணியில் 3 காரணங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தினசரி டாஸ்மாக் விற்பனை விகிதம் 25% வரை சரிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாளொன்றுக்கு இதன் மூலம் ரூ.35 கோடி வரை வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னணியில் 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 3,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களை மூடியது ஒரு காரணமாக கூறப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் 500 சில்லறை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

It has been reported that the daily sales rate of Tasmac in Tamil Nadu has fallen by up to 25%.

அதேபோல் சட்டவிரோத முறையிலான மதுபாட்டில் விற்பனையை காவல்துறையினர் கட்டுப்படுத்தியிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதா டாஸ்மாக் பார்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அதன் தீர்ப்பு வெளிவந்த பிறகு புதிதாக பார்களுக்கு உரிமம் வழங்கும் ஒப்பந்தம் தரப்படவுள்ளது.

டாஸ்மாக் விற்பனை குறைந்ததற்கும் அமைச்சரவை மாற்றப்பட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் கலால் துறையானது இப்போது அமைச்சர் முத்துசாமி வசம் சென்றிருக்கிறது.

அவர் டாஸ்மாக் விற்பனையை பற்றி கவலைக்கொள்ளாமல் அதில் சில சீர்த்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறார். அரசுக்கு எக்காரணம் கொண்டும் எந்த அவப்பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் அமைச்சர் முத்துசாமி மிகவும் கண்ணும் கருத்துமாக செயலாற்றி வருகிறார். இதற்கு முன்னர் எப்படியோ ஆனால் தனது நிர்வாகத்தின் கீழ் டாஸ்மாக் முறையாக செயல்பட வேண்டும் என விரும்புகிறார் முத்துசாமி.

It has been reported that the daily sales rate of Tasmac in Tamil Nadu has fallen by up to 25%.

அதனால் தான் டாஸ்மாக் வருமானம் குறைந்தாலும் கூட சட்டவிரோத முறையிலான எந்த ஒரு காரியத்துக்கும் அவர் இசைவு தெரிவிப்பதில்லை. இதனிடையே தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு டாஸ்மாக் மூலம் கிடைத்ட வருமானம் ரூ.150 கோடி வரை இருந்த நிலையில் இப்போது அதில் ரூ.35 கோடி வரை குறைந்திருக்கிறது.

நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு டாஸ்மாக் பார்கள் டெண்டர் விடப்படுவதன் மூலம் மீண்டும் விற்பனை விகிதம் இயல்பு நிலையை எட்டும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+