சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திட்டமிட்டபடி நாளை 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவது கேள்விக்குறி தான்.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ்

Google Oneindia Tamil News

சென்னை: 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டமிட்டபடி நாளை தமிழகத்தில் தொடங்குவது சந்தேகம் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Corona Vaccine இருக்கிறதா? Remdesivir யாரெல்லாம் எடுக்கலாம்? | Oneindia Tamil

    சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை டி எம் எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

    அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு கோவிட் காலத்தில் உதவிகள் செய்யும் வகையில் 104 எண்ணில் அழைத்தால் போன்ற உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     தடுப்பூசி 'ஸ்டாக்' இல்ல.. காலையிலேயே கிளம்பி வந்துடாதீங்க - கெஜ்ரிவால் 'அவசர' அறிவிப்பு தடுப்பூசி 'ஸ்டாக்' இல்ல.. காலையிலேயே கிளம்பி வந்துடாதீங்க - கெஜ்ரிவால் 'அவசர' அறிவிப்பு

    7 மாவட்டங்களில் சவால்

    7 மாவட்டங்களில் சவால்

    மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் , மற்றும் ஆக்சிஜன் வசதி உள்ள மருத்துவமனைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டிவிட்டர் பதிவிலும் 104 டி என் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். சென்னை, கோவை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் நோயை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

    கள்ளச்சந்தை

    கள்ளச்சந்தை

    நேற்று ரெம்டெசிவிர் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் 17 ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யட்டுள்ளது. கள்ள சந்தையில் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சந்தேகம் தான்

    சந்தேகம் தான்

    பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடு என்கிற எண்ணத்தில் இருக்காமல் பொதுமக்களின் கடமை என்கிற அடிப்படையில் செயல்பட்டால் இன்னும் சில நாட்களில் வேகமாக குறைக்க முடியும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணையதளத்தில் பதிவு செய்தாலும் கூட நாளை தடுப்பூசி கிடைக்குமா என்கிற தகவல்கள் இல்லை.
    போதிய தடுப்பூசி இருப்பு இல்லாததால் திட்டமிட்டபடி நாளை 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவது கேள்விக்குறி தான்

    மத்திய அரசு தரவில்லை

    மத்திய அரசு தரவில்லை

    அடுத்த டோஸ் எப்போது தடுப்பூசிகள் கிடைக்கும் என்கிற தகவல்கள் இன்னும் மத்திய அரசு அளிக்கவில்லை. புதிதாக ஒன்றரை கோடி ஆடர் செய்யப்பட்ட தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும் என்கிற தகவலை மத்திய அரசு இன்னும் எப்போது கிடைக்கும் என தகவல் இல்லை. இதுவரை 59000 வயல் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 50 விழுக்காடு படுக்கைகள் தனியாக ஒதுக்கீடு செய்ய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது . பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்தை தவிர்ப்பதுடன் , கவன குறைவுடன் இருக்க கூடாது" என்றார்.

    English summary
    It is doubtful that the corona vaccine for those over 18 years of age will start in Tamil Nadu tomorrow, said Radhakrishnan, the Principal Secretary of the Health Department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X