Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்கமே போச்சு..அவசரபட்டீங்களேணே! ஓபிஎஸ்ஸிடம் முணுமுணுத்த ஆதரவாளர்கள்! குஷியில் எடப்பாடி & கோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தற்போது லேசான முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சசிகலா டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஓபிஎஸ் அணியில் உள்ள சில நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகவும் இதன் காரணமாக ஓபிஎஸ்ஸிடமே அவர்கள் வெளிப்படையாக பேசி நிலையில் அவசரப்பட்டு விட்டோமோ என்ற ரீதியில் அவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Recommended Video

    ஓபிஎஸ் செய்வது தர்மயுத்தம் அல்ல.. அது துரோக யுத்தம்.. புட்டுபுட்டு வைக்கும் ஆர்பி உதயகுமார்!

    ஒண்ணுமே புரியல அதிமுகவிலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது! என்று சந்திரபாபு பாடலை ரீமேக் செய்து பாடி வருகின்றனர் அதிமுக தொண்டர்கள். அந்த அளவுக்கு ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் தற்போது ஆளாளுக்கு பஞ்சாயத்து செய்யும் அளவுக்கு மாறிவிட்டது.

    இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ் அணி இன்று இருந்த அதிமுக தற்போது சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணி சிதறுண்டு கிடக்கிறது.

    அதிமுகவில் மோதல்

    அதிமுகவில் மோதல்

    சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி அதன் பின்னர் தனது சாதுரியமான அதே நேரத்தில் மிகவும் அமைதியான செயல்பாடுகள் மூலம் கட்சியிலும் ஆட்சியிலும் தனது இருப்பை உறுதி செய்து கொண்டார். ஆட்சி அமைக்க ஓ பன்னீர்செல்வம் தயவு தேவை என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர் துணை முதல்வர் பதவி, கட்சி தலைமை பதவி என அளித்து தன்னுடனே வைத்துக் கொண்டார். இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான பனிப்போர் துவங்கியது. கூட்டணியில் பாமகவை சேர்ப்பது குறித்து இருவருக்கும் இடையே எழுந்த மோதல் அடுத்ததாக முதல்வர் வேட்பாளர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என அடுத்தடுத்து நீண்டது.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    அதையும் மறந்து இருவரும் தேர்தலில் ஒன்றாக கரம் கோர்த்து களம் இறங்கினாலும் தோல்வியே மிஞ்சியது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்று கொண்டார் எடப்பாடி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி ஓபிஎஸ்-க்கு கிடைத்தது. ஆனாலும் கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்பதை தனது நிர்வாகிகளை வைத்து அடிக்கடி வெளிப்படுத்தி வந்தார் இபிஎஸ் . அதற்கேற்றார் போல் ஓபிஎஸ் பல நேரங்களில் தமிழக முதல்வரை பாராட்டி பேசியது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு நல்ல கருவியாக சிக்கிக்கொண்டது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    அதை வைத்தே ஓபிஎஸ் திமுக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தி எடப்பாடி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என அவர் ஆதரவாளர்கள் போர் கொடி தூக்கினார். மாறி மாறி ஆலோசனை, மாவட்ட செயலாளர்கள், காவல், அதிரடி நடவடிக்கைகள், பொதுக்குழு, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ஏன் ரிசர்வ் வங்கி வரை அதிமுக இடங்களில் பேசு பொருளாக இருக்கிறது.

    ஒன்றாக இணையலாம்!

    ஒன்றாக இணையலாம்!

    இந்த நிலையில் பொதுக்குழுவுக்கு பிறகு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் உற்சாகத்தில் இருக்கும் ஓபிஎஸ் தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் அனைவரும் ஒன்றிணைைய வேண்டும் என தனது ஆவலை வெளிப்படுத்தினார் ஓபிஎஸ். அப்போது சசிகலா டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

    சசிகலா

    சசிகலா

    அதனை இபிஎஸ் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை இந்நிலையில் தான் சசிகலா டிடிவி தினகரன் குறித்த ஓபிஎஸ -ன் பேச்சு அவரது ஆதரவாளர்களுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோதும் அவரது மறைவுக்குப் பிறகும் சரி ஓபிஎஸ் கட்சியில் செல்வாக்கை இழப்பதற்கு காரணமே சசிகலா தான். சசிகலாவால் கொண்டுவரப்பட்டவர் தான் எடப்பாடி. சசிகலாவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இருப்பது தனிப்பட்ட விரோதம் அதற்கு ஓபிஎஸ் என்பவர் கடந்த நாட்களிலும் தற்போது பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டு வருகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

    நிர்வாகிகள் அதிருப்தி

    நிர்வாகிகள் அதிருப்தி

    ஓபிஎஸ் முதல்வராக இருந்த போதே அவரை நீக்க வேண்டும் என சசிகலா நினைத்தார். அதற்கு முன்னதாக ஐவர் அணியில் அவரை ஓரங்கட்டியவரும் சசிகலா தான். இப்படி ஓபிஎஸ்-க்கு தற்போது எடப்பாடி கொடுக்கும் நெருக்கடிகளை விட அதிக நெருக்கடிகளை கொடுத்தவர் சசிகலா தான். நிலைமை இப்படி இருக்க அதிமுகவில் சசிகலாவை கொண்டு வந்தால் அனைவரின் எதிர்காலமும் பறிபோய்விடும் எனவும் இதனால் தங்கள் தூக்கம் கூட பல நாட்களாக போய்விட்டது என புலம்பி வருகின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதுகுறித்த பேச்சுகளை அவரிடமே கூறியதாகவும் அவசரப்பட்டு பேசி விட்டோமோ என்கிற ரீதியில் ஓபிஎஸ் இருப்பதாக கூறுகின்றனர் தேனி ரத்தத்தின் ரத்தங்கள். இதனால் இபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் இருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+