Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டுப்..டுப்..டுப்.. மிரட்டலாய் சத்தமில்லாமல் வரும் ராயல் என்பீல்டு! சென்னை பைக்கர்களுக்கு குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிப்பதற்காக சென்னையில் ரூ.1,000 கோடி செலவில் தனது முதல் தயாரிப்பு ஆலையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் தற்போது எலக்ட்ரிக் பைக்குகள், கார்களை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கையில், இந்தியாவிலும் இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்துள்ளன. இத்தனை ஆண்டு காலமாக பைக் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட முன்னணி பைக் நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரித்திருந்தாலும், அதனை சந்தைப்படுத்த தயங்கி வருகின்றன.

 It is reported that Royal Enfields e-bike factory in Chennai will be set up at a cost of Rs.1,000 crore

உதாரணத்திற்கு பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் 'Chetak' எனும் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்துள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும் சுமார் 5 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் தாங்கும். அதேபோல அதிகபட்சமாக 63 மணிக்கு 63 கி.மீ எனும் வேகத்தில் 90 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டதாகும். ஆனால் விலைதான் கொஞ்சம் அதிகம். ஸ்கூட்டி மாடலில் வெளிவந்துள்ள இந்த பைக் தற்போது ரூ.1.30 லட்சத்திலிருந்து ரூ.1.60 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் மற்ற பெட்ரோல் பைக்குகளை போல இவர்கள் இந்த எலக்ட்ரிக் பைக்குகளை விளம்பரப்படுத்தவில்லை.

அப்படியே டிவிஎஸ்-க்கு வருவோம். குறைந்த பெட்ரோலில் அதிக மைலேஜ் என்பதுதான் இந்த நிறுவனத்தின் தாரக மந்திரம். எனவே விவசாயிகள் தொடங்கி நடுத்தர வர்க்க மக்கள் வரை இந்த பைக்குகளை பயன்படுதின்றனர். இதே நிறுவனம் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகளையும் தயாரித்துள்ளது. அந்த வரிசையில் 'அப்பாச்சி' பைக் ஏறத்தாழ அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இவர்களும் 'TVS iQube' எனும் ஸ்கூட்டி டைப் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தினர். இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்ய 4-5 மணி நேரம் வரை எடுக்கும். அதிகபட்சமாக 78 கி.மீ வேகத்தில் இது செல்லும். அதேபோல ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை செல்லும்.

ஆனால் பஜாஜ் நிறுவனம் போல இந்த நிறுவனமும் இந்த எலக்ட்ரிக் பைக்கை பெரிய அளவுக்கு விளம்பரம் செய்யவில்லை. இதற்கு பின்னால் இருப்பது ஒரேயொரு காரணம்தான். அதாவது பெட்ரோல்-எலக்ட்ரிக் பைக்குகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டும் முற்றிலும் வெவ்வேறான பைக்குகள். அதாவது இரண்டுக்கும் வெவ்வேறு கட்டுமானங்கள் தேவைப்படுகிறது. இப்படியான தனி கட்டுமானங்கள் இல்லாமல் ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவது தோல்வியில்தான் போய் முடியும். இதற்கு டொயோட்டா நிறுவனம் ஓர் எடுத்துக்காட்டு.

இந்நிறுவனம் முதன் முதலில் ஓர் Toyota RAV4-EV எனும் காரை அறிமுகப்படுத்தியது. இது சாலையில் ஓடிக்கொண்டிருக்கும்போது இதன் சக்கரங்கள் மட்டும் தனியாக கழன்று ஓடிவிடும். அந்த அளவுக்கு தோல்வியடைந்த ஓரு மாடல்தான் இது. காரணம் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பெட்ரோல் காரின் வடிவமைப்பை அப்படியே எலக்ட்ரிக் காராக மாற்றியதுதான். இந்த தோல்விக்கு பின்னர் தற்போது வரை டொயோட்டா வேறு எந்த எலக்ட்ரிக் காரையும் இன்றுவரை வெளியிடவில்லை.

இப்படி பெரும் நிறுவனங்களே எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் சந்தைபடுத்துதலில் தயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் தைரியமாக இந்த சந்தையில் குதித்திருக்கிறது. முதற்கட்டமாக எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்க சென்னையில் தனியாக ரூ.1,000 கோடியில் ஆலையை நிறுவ இருக்கிறது. இதற்கான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், தனியாக ஆலை அமைத்து தயாரித்தால் நிச்சயம் பலன் இருக்கும் என்றுதான் சொல்கிறார்கள். பார்ப்போம் சத்தமில்லாமல் வரும் டுப்..டுப்..டுப் எப்படி இருக்கிறது என்று.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+