சென்னை மின்வாரிய அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த ஐடி ஆபிசர்ஸ்..திடீர் சோதனையால் பரபரப்பு! EB விளக்கம்
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பசுமை எரிசக்தி பிரிவு செயல் பட்டு வரும் நிலையில் அங்கு சோதனை நடந்ததாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். பசுமை எரிசக்தி பிரிவு செயல் பட்டு வரும் நிலையில் அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென தமிழகத்தின் மிக முக்கியமான துறை ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது தொடர்பாக விசாரித்த போது ஏற்கனவே உள்ள பழைய வழக்குகள் தொடர்பாக சோதனை நடைபெற்றதாகவும், அந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கேட்பதற்காகவே இந்த சோதனை என கூறப்பட்டது. மேலும் மின்வாரிய அதிகாரிகள் சிலரிடமும் இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை ஐடி அதிகாரிகள் தரப்பில் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த ஐடி சோதனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில்," இன்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித் துறை இணை ஆணையர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பான வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும். எனவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications