வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம்
சென்னை: பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடங்கி வைத்தது என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புவதாக விஜய்க்கு திமுக கண்டனம் தெரிவித்தள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில்,"வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து! பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.

பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்திலும் விஜய் தலைமையிலான அரசு ஸ்டிக்கர் ஒட்டியதாக திமுக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.அந்த பதவில் கூறுகையில், "நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு
குறிப்பு:
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை" இவ்வாறு திமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?














Click it and Unblock the Notifications