விமான அவசர கதவை திறந்தது யார்? அண்ணாமலையாக இருந்தால்.. என்ன காயத்ரி இப்படி சொல்றாங்களே? உண்மையா?
சென்னை: விமானத்தின் அவசர கதவை அண்ணாமலை திறந்தது உண்மை என்றால் அது மிகப்பெரிய தவறு என்று பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த தலைவர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக தலைவர் பற்றி ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அதில், கடந்த 10 ஆம் தேதி 'போட்டோஷாப்' கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் 'எமர்ஜென்சி' கதவை திறந்து விளையாடி இருக்கிறார்கள்.
விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?" என்று குறிப்பிட்டு உள்ளார்.

யார்?
இந்த போஸ்டில் விமான கதவை திறந்தது யார் என்று செந்தில் பாலாஜி குறிப்பிடவில்லை. வெறுமனே கடந்த 10 ஆம் தேதி 'போட்டோஷாப்' கட்சியின் மாநிலத் தலைவர் என்று மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து பலரும் இது அண்ணாமலைதான் என்று போஸ்ட் செய்துள்ளனர். அண்ணாமலைதான் விமானத்தின் அவசர கதவை திறந்திவிட்டதாக கமெண்டில் பதில் அளித்து இருந்தனர். திமுகவை சேர்ந்த பலரும் அண்ணாமலைக்கு எதிராக போஸ்ட் செய்து இருந்தனர். இந்த நிலையில் காயத்ரி ரகுராம் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம் தமிழ்மின்ட் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த பேட்டியின் சுருக்கம் பின்வருமாறு, பாஜகவில் திமுக சாதிக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் என்னை கலந்து கொள்ள கூடாது என்று கூறினார். நீங்கள் வர வேண்டாம். வேறு பெண்கள் உங்களுக்காக போராடுவார்கள். ஆனால் நீங்கள் போக கூடாது என்று கூறினார். அது என்ன திட்டம் என்றே தெரியவில்லை. சாதிக் எங்களை பற்றித்தான் தப்பாக பேசினார். ஆனால் நாங்களே போராட கூடாது சொல்லிவிட்டார். அது ஏன் என்று தெரியவில்லை. அண்ணாமலை கட்சியின் தலைவராக இன்னும் தொடர காரணம் தெரியவில்லை. அண்ணாமலை பிஎல் சந்தோஷின் வளர்ப்பு மகன் என்று திருச்சி சூர்யா சொல்கிறார்.

என்ன சொன்னார்?
எல்லோரிடமும் இப்படித்தான் சொல்கிறார்கள். ஒருவேளை அதனால் அண்ணாமலைக்கு இந்த சப்போர்ட் இருக்கலாம். எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒருவேளை அதனால் அண்ணாமலைக்கு எந்த சிக்கலும் ஏற்படலாம் இருக்கலாம். அந்த விமான அவசர கதவை அண்ணாமலை திறந்தது உண்மை என்றால் அது மிகப்பெரிய தவறு. நான் எல்லாம் விமானத்தில் உட்கார்ந்தேன் என்றால் நடுங்குவேன். என்னை மாதிரி பயணிகளுக்கு இது இன்னும் அதிர்ச்சியை, பயத்தை கொடுக்கோம்.

அட்டாக்
அண்ணாமலை செய்ததது உண்மையாக இருக்கும் பட்சத்தில், சாதாரண நபராக இருந்தால் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். சாதாரண நபரை விமானத்தில் பயணிக்க கூடாது என்று தடை செய்து இருப்பார்கள். அண்ணாமலை ஏன் அவர் தனது வாட்சை பற்றி இவ்வளவு பேசுகிறார் என்று தெரியவில்லை. யாரவது உங்களின் வாட்ச் எவ்வளவு என்று கேட்டால்.. விலையை சொல்லுவோம். ஆனால் அண்ணாமலை ஏன் அதை இழுத்து பேசுகிறார் என்று தெரியவில்லை. திமுகவிற்கு எதிராக அண்ணாமலை தீவிரமாக பேசுவது உண்மைதான்.

விமானம்
அண்ணாமலை பேசுவது எல்லாம் அவரின் சொந்த வார்த்தைகள். அண்ணாமலை வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு பாஜகவில் நடந்ததை நான் விட மாட்டேன். மன்னிப்பு கேட்க வேண்டும். என்னையும். என் அம்மாவையும் அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி அனுப்பி உள்ளனர். இதில் ஆக்சன் எடுக்க வேண்டும். இல்லையென்றால் மீனாட்சி அம்மன் அருளால் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் செய்வேன்.

யாத்திரை
அண்ணாமலை யாத்திரை செல்லும் அதே நாளில் அவருக்கு எதிராக நான் போராட்டம் செய்வேன். 6 மாதத்திற்கு பின் என்னை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். இது பெண்களுக்கான கட்சி. நான் காத்திருப்பேன். இந்த கட்சிக்காக, தேசத்திற்காக நான் உயிரை கொடுப்பேன். ஆனால் என் மானத்தை விட்டு கொடுக்க மாட்டேன். கட்சியில் பெண்களை மதிக்க வேண்டும். எனக்கு நடந்தது அநீதி, அநியாயம். இது யாருக்கும் எப்போதும் நடக்க கூடாது, என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

மோதல் காரணம்
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரில் கடுமையான புகார்களை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராம் வைத்து இருக்கிறார். காயத்ரி ரகுராம் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்தார். பல சீனியர்கள் அமைதியாக புழுங்கிக்கொண்டு இருந்த நிலையில் காயத்ரிதான் இதில் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார்.இதனால் காயத்ரிக்கும் அண்ணாமலைக்கு இடையில் நேரடியாக மோதல் ஏற்பட்டது. கட்சிக்குள் மோனோபோலி இருப்பதாக.. அதாவது ஒரே ஒரு தலைவர் மட்டும் கட்சியில் அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புவதாக காயத்ரி புகார் வைத்து வருகிறார். மேலும் அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் எங்களுக்கு எதிராக கடுமையான, அருவெறுப்பான, மோசமான பர்சனல் அட்டாக் மேற்கொள்ளப்படுகிறது. வாஇதையடுத்து பாஜகவில் இருந்தும் காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் கூட காயத்ரி தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
அண்ணாமலை இனி மாநில அரசியலில் இல்லை.. பாஜக டாட்டா காட்டிவிட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்!












Click it and Unblock the Notifications