இது அவமானம்! தேசப்பற்றுடன் தொடர்பில்லாத பாஜக! தேசியக்கொடியில் காசு பார்க்கும் மோடி!சாடிய ஜோதிமணி
சென்னை: ‛‛தேசப்பற்றிற்கும் பாஜகவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே எதற்கு இந்த தேசியக்கொடி இயக்கம் என்று யோசித்து கொண்டிருந்தேன். இதில் காசு பார்க்கிறார் மோடி! அவமானம்'' என ஜோதிமணி எம்பி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு விழா ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது ஆண்டு சுதந்திரதினத்தை சிறப்பாக ஒரு ஆண்டு வரை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக 75வது சுதந்திர தினமானது இந்தியாவில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது.

ஊர்வலம் செல்லும் பாஜகவினர்
ஹர்கர் திரங்கா இயக்கம் மூலம் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் தேசியக்கொடி ஊர்வலம் சென்று வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி கேட்டு கொண்டதன் அடிப்படையில் சமூக வலைதள பக்கங்களில் தேசியக்கொடியை டிபியாக வைத்துள்ளனர்.

ஜோதிமணி எம்பி விமர்சனம்
இதற்கிடையே தான் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார். ஹர்கர் திரங்கா இயக்கத்தை குறிப்பிட்டு அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜோதிமணி எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ தேசப்பற்றிற்கும், பாஜகவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே எதற்கு இந்த தேசியக்கொடி இயக்கம் என்று யோசித்து கொண்டிருந்தேன். அதிலும் காசு பார்க்கிறார் மோடி! அவமானம்'' என குறிப்பிட்டுள்ளார்.

படத்தில் இருப்பது என்ன?
மேலும் அவர் இந்த பதிவுடன் புடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹர் கர் திரங்கா என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் தேசியவாதம் எனற் பெயரில் ஒரு புதிய ஊழல் எனும் தலைப்பில் சில விபரங்கள் உள்ளன. அதில் ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு கொடிக்கு ரூ.38 பிடித்தம் செய்யப்படும். ஹரியானாவில் உள்ள ரேஷன் டிப்போவில் உள்ள மக்கள் கொடியை ரூ.20க்கும் வாங்க வேண்டிய கட்டாய்ததில் உள்ளனர். தலா ரூ.25க்கு கொடிகளை விற்கும் தபால் நிலையங்கள் குஜராத் பல்வேறு மாநிலங்களுக்கு பழுதடைந்த கொடிகளை வழங்கியது என குறிப்பிடப்பட்டு இருப்பதோடு, மக்களின் உணர்வுகளை பணமாக்குதல் என எழுதப்பட்டுள்ளது.

தொடரும் விமர்சனம்
அதாவது மத்திய அரசின் ஹர் கர் திரங்கா இயக்கத்தை தொடர்ந்து ஹரியானாவில் உள்ள ரேஷன் கடையில் தேசியக்கொடி வாங்காவிட்டால் ரேஷன் மறுக்கப்படும் வீடியோ வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பாஜக எம்பி வருண்காந்தி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக தான் ஜோதிமணி எம்பி விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications