குரு நானக் இந்துக்களுக்கு குரு! முஸ்லீம்களுக்கு ஆன்மிக வழிகாட்டி! காதர் மொகிதீன் புகழாரம்!
சென்னை: இந்துக்களுக்கு குருவாகவும், முஸ்லீம்களுக்கு ஆன்மிக வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் குரு நானக் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் கூறியிருக்கிறார்.
குரு நானக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை சுட்டிக்காட்டியுள்ள அவர், குரு நானக் பற்றியும் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கலைஞர் வேடம்
ஒரு காலத்தில் மாணவர்கள், காந்திஜியின் வேடமிட்டு கொண்டாடுவர், சில காலங்களில் பாரதியார் வேடமிட்டு கொண்டாடியதை பார்த்திருக்கிறோம். முதன் முறையாக மாணவர், மாணவியர் கலைஞர் வேடமணிந்து அவரின் பிறந்தநாளை கொண்டாடியதை பார்த்தோம் . மக்களின் மனங்களில் வாழ்ந்து வந்த கலைஞர், இப்போது குழந்தைகளின் இதயங்களிலும் இடம் பிடித்துவிட்டார் என்பது இதன் மூலம் தெரிந்தது.

குருநானக் கல்லூரி
ஜூன் 3ல் சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற மாணவர் பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்று பரிசுகளை வழங்கி ஆற்றிய உரை பொன் தகடுகளில் பொறிக்கப்பட வேண்டியவை என்பதை இங்கே பதிவு செய்தேயாகவேண்டும்.

பாபா நானக்
குருநானக் பற்றிப் பொதுவாக கூறப்படும் கருத்து இது. ''பாபா நானக் இந்துக்கா குரு முஸல் மான் கா பீர்'' - பாபா நானக், இந்துக்களுக்கு குருவாக இருக்கிறார், முஸ்லிம்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்கிறார் என்பது இதன் அர்த்தம். இத்தகைய பெருமைக்குரியவர் பெயரில் உள்ள கல்லூரியில் பேசியது தமிழக முதலமைச்சர் தெரிவித்தது, இந்திய மக்கள் அனைவருக்கும் பொருத்தமானது மட்டுமின்றி தமிழகத்தின் தனித்தன்மையை நிலைநிறுத்துவம் ஆகிறது.

வெற்றி பயணம்
பாதை விளங்கிவிட்டது, இனி பயணத்தை தொடர வேண்டியதுதான். இந்த பயணம் தமிழகத்திற்கு மட்டும் வெற்றி தரும் பயணமல்ல, இந்திய திருநாட்டிற்கே உலகம் போற்றும் வெற்றியை தரும் பயணமாகும்! பாதை தெரிகிறது; பயணம் தொடர்வோம்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications