Jacto Geo: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏன்? ஊழியர்கள் விளக்கம்!
ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏன் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏன் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. நாளையில் இருந்து பணிக்கு திரும்புவதாக அரசு ஊழியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சற்றுமுன் சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

என்ன விளக்கம்
அவர்கள் தங்கள் விளக்கத்தில், நாங்கள் மொத்தம் 9 கோரிக்கையை வைத்தோம். இது தொடர்பாக முதல்வரை அழைத்து பேச வேண்டினோம். ஆனால் அவர் எங்களை அழைக்கவில்லை. அதைத்தான் நாங்கள் கேட்டோம். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. நீதி அரசர்கள் கேட்டும் கூட அது நடக்கவில்லை.

கடுமையான நடவடிக்கை
வரும் பிப்ரவரி முதல் வாரம் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு தேர்வுகள் வருகிறது. இதனால் நீதிமன்ற கோரிக்கை, மக்களின் கோரிக்கை, மாணவர்களின் நலன் , அரசின் கோரிக்கை, பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கை ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம். இதனால் போராட்டத்தை கைவிடுகிறோம்.

இன்னும் இருக்கிறது
எங்கள் கோரிக்கை இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. எங்களில் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலர் ஜெயிலில் இருக்கிறார்கள். இதை அரசு திரும்ப பெற வேண்டும். அரசு உடனடியாக இதை செய்ய வேண்டும்.

உடனே பேச வேண்டும்
முதல்வர் எங்களை அழைத்து பேச வேண்டும். பிரச்சனைகளை தமிழக முதல்வர் பேசி தீர்க்க வேண்டும். ஆனால் இதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எங்கள் போராட்டம் எப்போதும் போல் உயிர்ப்போடு இருக்கும். தீர்விற்கு ஒரே வழி பேச்சுவார்த்தை மட்டும்தான்.

மீண்டும் வேலை
நாளை நாங்கள் வேலைக்கு திரும்புவோம். 2003ல் இருந்து நாங்கள் களத்தில் இருக்கிறோம். பல பிரச்சனைகளை நாங்கள் தீர்த்து இருக்கிறோம். இதையும் சரி செய்வோம். எங்களுக்கு இத்தனை நாள் ஆதரவு அளித்த அனைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்று கூறியுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications