பிப்..15ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. சிவ்தாஸ் மீனா அவசர கடிதம்.. பரபர எச்சரிக்கை
சென்னை: பிப்ரவரி 15ல் ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து துறை செயலாளர்கள், துணை தலைவர்களுக்கும் அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழக அரசின் நிதி நிலைமை போதுமான அளவு இல்லாததால் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் தான் இந்நிலையில் தான் தங்களின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 15ம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி மாதம் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையே தான் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இன்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், ‛‛அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். நிதி நிலைமை சரியான உடன் படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
ஆனால் அவரின் கோரிக்கையை ஜாக்டோ ஜியோ ஏற்கவில்லை. மேலும் தங்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில் தான் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து துறை செயலாளர்கள், துணை தலைவர்களுக்கும் அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் ‛‛பிப்ரவரி 15ம் தேதி அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும். அன்றைய தினம் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications