‛‛திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்’’.. தங்கம் தென்னரசுவின் கோரிக்கை நிராகரிப்பு.. ஜாக்டோ ஜியோ அதிரடி
சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடக்கூறிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கோரிக்கையை ஜாக்டோ ஜியோ அமைப்பு அதிரடியாக ஏற்க மறுத்ள்ளது. மேலும் திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என்பது நடத்தப்படும். எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு பரபரப்பாக தெரிவித்துள்ளது.
2021 சட்டசபை தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் ஆட்சியை பிடித்த பிறகு திமுக அதனை நிறைவேற்றவில்லை. இந்த திட்டத்தை நிறைவேற்ற போதிய நிதி மாநில அரசிடம் இல்லை.

இத்தகைய சூழலில் பழைய ஓய்வூதி திட்டத்தை கொண்டு வந்தால் அது மாநில அரசுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் மாநில அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இதற்கிடையே தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் தான் தங்களின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 15ம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். அதன்பிறகு பிப்ரவரி மாதம் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். மேலும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். நிதி நிலைமை சரியான உடன் படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த கோரிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என்பது பற்றி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கோரிக்கை என்பது அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கோரிக்கையை ஜாக்டோ ஜியோ அமைப்பு ஏற்க மறுத்துள்ளது.
மேலும் திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜாக்டோ ஜியோ சார்பில், ‛‛திட்டமிட்டடப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். ஏனென்றால் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் போராட்டம் என்பது வாபஸ் பெறப்படும்.
முதற்கட்டமாக நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் . அதன்பிறகு திட்டமிட்டப்படி பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும்'' என அதிரடியாக அறிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications