திமுகவுக்கு வருகிறது செக்.. 2 காவல் அதிகாரிகளை வைத்து.. அதிமுக தீட்டும் அதிரடி திட்டம்!
ஜாபர் சேட் சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: காக்கி சட்டை புள்ளிகளை வைத்து ஒரே கல்லில் எடப்பாடியார் 2 மாங்காய் அடிக்க போகிறார் என்பதுதான் பரபரப்பான பேச்சாக உள்ளது.
தமிழக போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதனின் அதிரடிகளை மக்கள் கண்கூட பார்த்து வருகிறோம். ஒருகட்டத்தில் சென்னை என்றாலே கொலை நகரம் என்ற பெயர் இருந்தது. எங்கு திரும்பினாலும் வழிப்பறி, கொள்ளை போன்றவை அசால்ட்டாக நடந்து வந்தது.
இதற்கெல்லாம் ஆங்காங்கே சிசிடிவி காமிராவை வைத்தால்தான் சரிப்படும் என்று முடிவெடுத்து, அதன்படியே செயல்படுத்தியவர் விஸ்வநாதன்.

செயல்பாடுகள்
நாட்டிலேயே, அதிக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரே நகரம் சென்னைதான். பெருமளவு குற்றச் செயல்கள் அனைத்தும் இந்த சிசிடிவி காமிராக்கள் மூலம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை மக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால்தான் விஸ்வநாதனின் செயல்பாடுகளை பாராட்டி ஆளுமை விருது நேற்று முதல்வர் வழங்கி பாராட்டினார்.

அதிமுக அரசு
இது ஒரு பக்கம் இருந்தாலும், விஸ்வநாதனை இன்னும் பெட்டராக பயன்படுத்தி கொள்ளலாமா என்று முதல்வர் தரப்பு யூகிக்கிறதாம். பணி ரீதியாக விஸ்வநாதனை எந்த குறையும் சொல்ல முடியாவிட்டாலும், அவரது சேவையை மேலும் விரிவாக்க அதிமுக அரசு கருதுகிறதாம்.

ஜாபர் சேட்
அதனால்தான் விஸ்வநாதனை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கலாமா... ஒருவேளை விஸ்வநாதனுக்கு இந்த பொறுப்பு கொடுத்துவிட்டால், சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் ஜாபர் சேட்டை சென்னை மாநகர கமிஷனராக நியமித்துவிடலாமா என்ற பரபரப்பு ஆலோசனை நடப்பதாக சொல்கிறார்கள். ஏனென்றால், இப்போதைக்கு திமுகவுக்கு ஒரு அழுத்தம் தருவது என்பது அதிமுகவின் கட்டாயமாக உள்ளது. பலம் பொருந்தி வரும் திமுகவுக்கு செக் வைக்க நம்பகத்தன்மை வாய்ந்த நபர் தேவை என்பதால்தான் ஜாபர் சேட் பெயர் அடிபடுகிறது.

நெருக்கமானவர்
திமுக ஆட்சிக் காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்தவர்தான் ஜாபர்சேட். அவர் என்ன நினைப்பாரோ அதை சாதித்துவிடுவார். சுருக்கமாக சொல்ல போனால், ஸ்டாலின், அழகிரி, கனிமொழியையும் தாண்டி கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்பட்டவர். இதுவரை தமிழக காவல்துறை வரலாற்றிலேயே அதிகாரம் மிக்கவர் யாருமே இருந்தது கிடையாது என்ற பெயரையும் பெற்றவர்.

அதிரடி திட்டம்
இப்போது திமுகவுக்கு எதிராக இவர் இருக்கிறார். "திமுக ஆட்சி காலத்தில் என்னென்ன நடந்ததோ எல்லா விஷயமும் என் பாக்கெட்டுக்குள்" என்ற ஒரு விஷயத்தை முன்வைத்து டிஜிபியாகவும் பாஜக மூலமாக கணக்கு போட்டவர் இவர் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அதனால் திமுகவுக்கு செக் வைக்க இவர்தான் சரியான ஆள் என்பதுதான் அதிமுகவின் கணக்காக உள்ளதாம். ஆக மொத்தம் விஸ்வநாதன் ஒரு பக்கம், ஜாபர் சேட் இன்னொரு பக்கம் என அதிரடி காட்ட அதிமுக திட்டமிட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications