சிதம்பரம் கோர்ட்டுக்கு சூர்யா வரும்போது ஒரு வன்னியர் உதைத்து ரூ.1லட்சம் வாங்குவார்-பகிரங்க மிரட்டல்
சென்னை: வன்னியர் சங்கம் தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் நீதிமன்றத்துக்கு நடிகர் சூர்யா வரும் போது ஏதாவது ஒரு வன்னியர் அவரை உதைத்து ரூ1 லட்சம் பரிசு பெறுவார் என ட்விட்டரில் பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிராக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்று அமேசான் நிறுவனம் ஆகியவை மீது வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி வழக்கு தொடர்ந்தார். அவதூறு பரப்புதல், இரு சமூகங்களுக்கு இடையே வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது..

சூர்யா கோர்ட்டுக்கு வந்தால்
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள @Karu_Sathya என்ற நெட்டிசன், வழக்கு வெற்றியோ, தோல்வியோ சிதம்பரம் நீதிமன்றத்திற்கு சூர்யா வரும்போது, ஏதாவது ஒரு வன்னியன் நடிகன் சூர்யாவை உதைத்து விட்டு, 1 இலட்சம் ரூபாயை தட்டிட்டு போக போறான் என பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாமக செயலாளரின் சர்ச்சை அறிவிப்பு
ஜெய்பீம் விவகாரத்துக்காக நடிகர் சூர்யாவை உதைத்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இது மிகப் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் வன்முறையை தூண்டும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

காடுவெட்டி குருவின் மகன்
இதேபோல் மறைந்த வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனும், 10,000 பேர் ஒன்று திரண்டு சூர்யாவின் வீட்டின் முன்பு நின்றால் அவரால் எதுவும் செய்ய முடியாது. 5 துப்பாக்கி ஏந்திய போலீசால் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது என கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
Recommended Video

சூர்யா, ஞானவேலுக்கு குரு மகன் எச்சரிக்கை
மேலும் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் அவரால் எந்தப் படத்திலும் நடிக்க முடியாது; எந்தப் படமும் எடுக்க முடியாது. இயக்குநர் ஞானவேல் தனது வீட்டை விட்டு வெளியே வர முடியாது எனவும் கனலரசன் எச்சரித்திருந்தார். இதனையடுத்து நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றத்துக்கு சூர்யா வந்தால் தாக்குவோம்; உதைப்போம் என சமூக வலைதளங்களில் பகிரங்கமாகவே மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications