Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெய்பீம் ஜாதி சர்ச்சை: 7 நாட்களில் ரூ.5 கோடி தர வேண்டும்! சூர்யா, ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவாக சித்தரிப்பதாக குற்றம்சாட்டி நடிகர் சூர்யா, அமேசான் நிறுவனம் ஆகியவற்றுக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா 7 நாட்களுக்குள், ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீசில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் அமேசான் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி இருந்தது ஜெய்பீம் என்ற திரைப்படம்.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டதாக திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே எழுத்து மூலமாக ரசிகர்களுக்கு அறிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில், காவல்துறையினரால் ராஜாக்கண்ணு என்பவர் சிறைவாச கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

வன்னியர் சங்கத் தலைவர்

வன்னியர் சங்கத் தலைவர்

ஆனால் இதில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் காவல்துறை உதவி ஆய்வாளர் பெயர் குருமூர்த்தி என்று சூட்டப்பட்டிருந்தது. மேலும் குருமூர்த்தி தொலைபேசியில் பேசும் காட்சியில், வன்னியர்கள், வணங்கும் அக்னி கலசம் படம், காலண்டரில் இடம் பெற்றிருந்தது. உண்மையிலேயே அந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை ஆய்வாளர் பெயர் அந்தோணிசாமி. ஆனால் குருமூர்த்தி என்பது மறைந்த வன்னியர் சங்கத்தின் தலைவர் குரு, பெயரோடு பொருத்திப் போகிறது என்று பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

அக்னி கலசம்

அக்னி கலசம்

இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் படக்குழுவினருக்கு 9 கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டார் . ஆனால் இந்த அறிக்கைக்கு பதில் அளித்த சூர்யா, வருத்தம் தெரிவிக்கவில்லை. பெயர் அரசியல் வேண்டாம் என்று அன்புமணி ராமதாசுக்கு அறிவுரை வழங்கினார். அதேநேரம் படக்குழுவினர், அக்னி கலசம் இடம்பெற்ற படத்தை மாற்றி விட்டு அதற்கு பதிலாக மகாலட்சுமி படம் இடம் பெறும் வகையில், காலண்டரை கிராபிக்ஸ் மூலம் மாற்றி விட்டனர்.

அந்தோணிசாமி பெயர்

அந்தோணிசாமி பெயர்

இருப்பினும், அந்தோணிசாமி என்பவர் எப்படி குருமூர்த்தி என்று மாற்றப்பட்டார், மற்றவர்கள் பெயர் அனைத்தும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இருக்கும் போது ஏன் குருமூர்த்தி என்று பெயரிடப்பட்டு உள்ளது என்ற கேள்வி தொடர்ந்து சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்தான் வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

படக் குழுவினர்

படக் குழுவினர்

வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருள்மொழி தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2டி என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட், சூர்யா, ஜோதிகா ஆகிய பட குழுவினருக்கும் பெங்களூரில் உள்ள அமேசான் நிறுவனத்திற்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Recommended Video

    ஜோதிகா பேசுனதை கவனீச்சிங்களா.. ஜெய்பீம் படத்தின் நோக்கம் இதுதான்! எச்.ராஜா எடுத்துவிடும் பாயிண்ட்
    5 கோடி ரூபாய்

    5 கோடி ரூபாய்

    அந்த நோட்டீஸில் தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டது வன்னியர் சமுதாயம், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரவலாக வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் குரு. ஆனால் வன்னியர் சமுதாயத்தை இந்த திரைப்படத்தில் தவறாக சித்தரித்து உள்ளனர். இதற்காக நடிகர் சூர்யா 7 நாட்களுக்குள் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு, 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் பாலு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+