நிஜ செங்கேனிக்கு சூர்யா வீட்டில் விருந்து! திடீரென துப்பாக்கியுடன் வந்த போலீஸ்! இரவில் நடந்தது என்ன?
சென்னை: போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்ட ராஜ கண்ணுவின் கதையை மையமாக வைத்து ஜெய்பீம் படத்தை எடுத்து 40 கோடி ரூபாய் வரை சம்பாதித்த சூர்யா, ராஜகண்ணுவின் மனைவிக்கு உதவி எதுவும் செய்யவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் வெளியாகி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சூர்யா செய்த சில செயல்கள் பாராட்டுகளை பெற்றுள்ளன.
Recommended Video

ஜெய்பீம்
ஜெய்பீம் படம் வெளியான போது ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்றது. உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி ரேட்டிங்கில் இதுவரை முதலிடத்தில் இருந்த ஷஷாங்க் ரிடம்ப்சன் படத்தை ஓவர் டேக் செய்து முதலிடம் பிடித்தது. இதே போல் உலக அளவில் சினிமா காதலர்களின் ஆதர்ச திரைப்படமான காட் பாதரையும் கூட ஜெய்பீம் முந்தித்தள்ளியது. இந்த நிலையில் தான் ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை வில்லனாக சூர்யாவும் திரைப்பட இயக்குனர் ஞானவேலும் சித்தரித்துள்ளதாக பாமக எதிர்ப்பு தெரிவித்தது.

சூர்யா பதில்
இதற்கு ஒரு பக்கம் சூர்யா தரப்பு பதில் அளித்துக் கொண்டிருந்த நிலையில், ஜெய்பீம் படத்தில் காட்டியதை போல ராஜகண்ணுவின் மனைவி புதிய வீட்டில் எல்லாம வசிக்கவில்லை, தற்போதும் கூட ஒரு கூடாரம் அமைத்து குடும்பத்துடன் கஷ்டத்துடன் வாழ்ந்து வருவது தெரியவந்தது. மேலும் தன்னுடைய கதையை திரைப்படமாக்க சூர்யா எந்த அனுமதியும் பெறவில்லை என்றும், தற்போது வரை தனக்கு சூர்யா எந்த உதவியும் செய்யவில்லை என்றும் ராஜகண்ணுவின் மனைவியான பார்வதி பேட்டி அளித்தார்.

10லட்சம் ரூபாய் உதவி
இந்த நிலையில் பார்வதிக்கு 10லட்சம் ரூபாய் வழங்குவதாக சூர்யா அறிவித்தார். ஆனால் ஜெய்பீம் படம் மூலம் 40 கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டு 10 லட்சம் ரூபாய் கொடுத்து சூர்யா ஏமாற்றப்பார்க்கிறார். இது தான் சமூக நீதியா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இப்படியாக ஜெய்பீம் சர்ச்சை ஓயாமல் தொடர்நது கொண்டிருந்த நிலையில், வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சி வைத்ததாக கூறி நடிகர் சூர்யாவிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த ஐந்து கோடி ரூபாயை சூர்யாவிடம் இருந்து வாங்கி ராஜகண்ணுவின் மனைவி பார்வதிக்கு கொடுக்க உள்ளதாகவும் பாமக கூறியது.

சூர்யா வீட்டில் விருந்து
இந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பார்வதி சென்னையில் உள்ள சூர்யா வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் சென்னை வந்த அவரை சூர்யா தனது வீட்டில் வரவேற்று இரவு உணவு கொடுத்து உபசரித்துள்ளார். அத்தோடு தற்போது பார்வதியின் குடும்ப நிலை குறித்தும் முழுமையாக சூர்யா கேட்டறிந்துள்ளார். மேலும் ஏற்கனவே கொடுப்பதாக கூறிய 10 லட்சம் ரூபாயுடன், கூடுதலாக 5லட்சம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் ரூபாயை சூர்யா பார்வதியின் பெயரில் வங்கியின் வைப்புத் தொகையாக டெபாசிட் செய்து அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார்.

பார்வதி நன்றி தெரிவித்தார்
சூர்யா வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து 15 லட்சம் ரூபாய் நிவாரணமும் கொடுத்ததால் நெகிழ்ந்து போன பார்வதி நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டார். இதனிடையே நேற்று இரவு திடீரென சென்னையில் உள்ள சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவை தாக்குபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் என மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் அறிவித்திருந்தார். இதே போல் வேறு சில பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளும் சூர்யா தங்கள் ஊருக்குள் இனி நுழைய முடியாது, அப்படி நுழைந்தால் நிச்சயமாக தாக்குதல் நடத்துவோம் என்று சமூக வலைதளங்களில் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு
இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறிது காலத்திற்கு சூர்யா வெளியே செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications