ஜெய் பீம்: சூர்யா மட்டுமல்ல.. ஜோதிகா படங்களையும் திரையிட கூடாது.. ஒன்று திரண்ட பாமக
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் நடித்த திரைப்படங்களை புதுச்சேரியில் எந்த தியேட்டரிலும் வெளியிடக் கூடாது என வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்களிடம் புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.
Recommended Video
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோதிகா தயாரிப்பு நிறுவனமான 2 டி தயாரிப்பில் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியானது.
இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அதே அளவு எதிர்ப்பையும் பெற்றுள்ளது.

அக்னி கலசம்
அந்த படத்தில் ஒரு காவல்துறை அதிகாரி பேசும் பொழுது அவர் பின்னால் வன்னியர் சங்கத்தின் அடையாளச் சின்னமான அக்னி கலசம் இருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த காட்சி அகற்றப்பட்டாலும் இதுவரை எதிர்ப்பு குறைந்தபாடில்லை.

சூர்யா, ஜோதிகா படங்கள்
இந்த நிலையில் புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் புதுவை மாநிலத்தில் உள்ள சுமார் 10 தியேட்டர்களில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த திரைப்படங்களை வெளியிடக் கூடாது என வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்களிடம் மனு அளித்தனர்.

ஓடக் கூடாது
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் கணபதி கூறும்பொழுது, வன்னியர்களை மற்ற சாதியினருக்கு எதிர்ப்பாளர்கள் போல் காட்டி மக்கள் மத்தியில் விரோத போக்கை கடைபிடிக்கும் பிரபல நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் திரைப்படங்களை புதுச்சேரியில் எந்த தியேட்டரிலும் வெளியிடக் கூடாது என வலியுறுத்தி மனு கொடுத்திருக்கிறோம். மனுவை பெற்றுக்கொண்ட தியேட்டர் உரிமையாளர்களும், தங்களுக்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஓடிடி
சமீப காலமாக ஜோதிகா மற்றும் சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ஓடிடி தளங்களில்தான் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில், சூர்யா மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே சில சில மனக் கசப்புகள் எழுந்து அடங்கியிருந்தன. இப்போது ஜெய்பீம் விஷயத்தை கருத்தில் வைத்து பாமக நேரடியாக சூர்யா, ஜோதிகா படங்களுக்கு எதிராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications