திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை – எழும்பூர் நீதிமன்றம் அதிரடி
சென்னை: திமுக தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூரத்தி பரபரப்பான கருத்துகளுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார். தற்போது தவெக தலைவர் விஜய் குறித்து வைரலாகி வரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, முன்பு ஆளுநர் ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பூ குறித்து ஆபாசமாக பேசியிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு 3.3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது [Jail for DMK Sivaji Krishnamurthy].
சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை
14.06.2023 ஆம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான நடிகை குஷ்பூ குறித்து ஆபாசமாக பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக காவல்துறையினர் அவதூறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று அதில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள், 3 மாதங்கங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
விரைவில் கைது
மேலும் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்காக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நீதிமன்றம் ஒரு மாதம் அவகாசம் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications