"லுங்கி"யோட ஜெய்சங்கர் வந்துட்டாரு.. பார்சலை பிரித்தால்? விக்கித்த நட்பு.. கனத்த "பெருந்தன்மை".. வாவ்
சென்னை: தான் உண்டு தன் வேலை என்று என்றிருப்பவர் பலர்.. ஆனால், பிறர் துன்பத்தையும் தன்னுடைய துன்பமாக கருதியவர்கள் ஒருசிலரே.. அதில் ஒருவர்தான் நடிகர் ஜெய்சங்கர். எத்தனையோ பேருக்கு சோறும், வாழ்வும் போட்டவர்.. பெருந்தன்மையான குணம் கொண்டவர் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கிறது என்றாலும், ஒரே ஒரு உதாரணம் மட்டும் இங்கு பார்ப்போம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர், காதல் மன்னன் ஜெமினி கணேசன் என பெரிய பெரிய ஜாம்பவான்கள், திரையுலகில் புயலாய் கலக்கி கொண்டிருந்தபோது, தென்றலென உள்ளே நுழைந்தவர் ஜெய்சங்கர்..

தன்னுடைய மென்மையான அணுகுமுறையாலும், மிகைப்படுத்தப்படாத நடிப்பாலும், மக்கள் கலைஞர் என்ற படத்தை மிக குறுகிய காலத்திலேயே அவரால் பெற முடிந்தது.
ஜென்டில் மேன்: குறைந்த சம்பளத்தில் நிறைவாக நடித்து தந்தவர் ஜெய்சங்கர்.. எந்தவித தொந்தரவும் தந்ததில்லை.. ஈகோ பார்த்தது இல்லை.. சம்பளத்தில் பாக்கி வைத்தால், அதையும் கேட்பதுமில்லை... "அவங்ககிட்ட இல்லேன்னுதான் நமக்கு தரமுடியாம இருக்காங்க. அவங்களுக்கு கிடைக்கும்போது தரட்டும். கிடைச்சும் தரலையா... பரவாயில்ல" என்று அனைத்தையும் எளிதாக எடுத்து கொண்டவர்..
தன் வீட்டு குடும்ப விழா, பிறந்தநாள் விழா, கல்யாணம் என அனைத்தையுமே, ஆதரவற்ற விடுதிகளில் கொண்டாடியவர்.. தனக்கு தொடர்புடைய பிரபலங்களையும், அங்கு அழைத்துப்போய் அவர்கள் கையாலேயே பரிமாற செய்தவர்.. "மெர்சிஹோம்" என்ற விஷயத்திற்குள் திரையுலகை கொண்டு சென்றவர். வயது கூடிக்கொண்டே வர, வர பட வாய்ப்புகள் குறைந்தாலும், அவரது தயாள குணம் மட்டும் குறையவே இல்லை.

நட்புக்கு அடையாளம்: சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரும், பிரபல தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், பெருந்தன்மையான நட்புக்காக ஒரு உதாரணத்தை சொல்லியிருந்தார்.. அதன் சுருக்கம்தான் இது:
"அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தை பிரபல தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி எடுத்திருந்தார்.. இந்த படத்தில், ஜெய்சங்கர் கெஸ்ட் ரோல் செய்திருப்பார்.. கெஸ்ட் ரோல் என்பதால் பணம் எதுவும் வாங்காமல் நடித்திருந்தார். ஆனாலும், அழகன் தமிழ்மணி விடவில்லை..
படத்தில் நடித்ததிதற்காக 50,000 ரூபாய் தந்தாராம்.. உடனே ஜெய்சங்கர், உன் படத்தில் நடிக்க எனக்கு பணம் தரணுமா, என்ன? வேண்டாம் என்று சொல்லி மறுத்துள்ளார்.. ஆனாலும், அழகன் தமிழ்மணி விடலையாம்..
"என் நட்புக்காக முன்னுரிமை தந்து, உடனே வந்த நடிச்சு தந்திருக்கீங்க, அதனால், இந்த பணத்தை வாங்கி கொள்வதே முறை.. ஒருவேளை என்னைக்காவது எனக்கு கஷ்டம் ஏற்பட்டால் அப்போ உங்களிடம் வாங்கி கொள்கிறேன்" என்று சொல்லி, அந்த பணத்தையும் தந்துவிட்டு வந்தாராம்.
நின்ற பணி: இந்த படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்தின் வேலையை துவங்கியிருந்தார் அழகன் தமிழ்மணி.. அந்த படத்தின் ரீ-ரிக்கார்டிங் பணியானது, போதிய பணமில்லாமல் நின்றுவிட்டது.. பணம் இருந்தால்தான், ரீ-ரிக்கார்டிங் நடக்கும் என்ற சூழலும் வந்துவிட்டது.. பணத்துக்காக அழகன் தமிழ்மணி திண்டாடறார்.. ஆனால், பணத்தை அவரால் புரட்ட முடியாமல் திணறி உள்ளார்.
வழக்கமாக ஜெய்சங்கருக்கு தினமும் போன் செய்து பேசிவிடுவாராம் அழகன் தமிழ்மணி.. ஆனால், இந்த டென்ஷனில் ஜெய்சங்கரிடம் பேசாமல் இருந்திருக்கிறார்.. ஒருமுறை அழகன் தமிழ்மணியை நேரில் பார்த்த ஜெய்சங்கர், "என்னாச்சு, உன்கிட்ட இருந்து நாலஞ்ச நாளா போன் காணோமே" என்று கேட்டுள்ளார். அதற்கு அழகன் தமிழ்மணி, "பணத்துக்காக படம் பாதியில் நிற்கிறது" என்று சொல்லிஉள்ளார்.
போன் பண்ணு: உடனே ஜெய்சங்கர், "பணம் கிடைச்சதா?" என்று கேட்கவும், "ஓரளவு சமாளிச்சிட்டேன். தயார் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொல்லி உள்ளார்.. அதற்கு ஜெய்சங்கர், "சரி நாளை காலைல எனக்கு போன் பண்ணு" என்று சொல்லி உள்ளார்.
"சரி" என்று தலையாட்டினார் அழகன் தமிழ்மணி.. எப்படியும் தனக்கு பணத்தை தருவதற்காகத்தான் போன் செய்ய சொல்கிறார் என்பதை அறிந்த அழகன் தமிழ்மணி, மறுநாள் காலை ஜெய்சங்கருக்கு போன் பண்ணலயபாம்.. ஆனால், ஜெய்சங்கர் அப்போதும் விடவில்லை. காலையிலேயே நேராக அழகன் தமிழ்மணி வீட்டுக்கு வந்துட்டாராம்.
பெருந்தன்மை: கட்டிய லுங்கியுடன் உள்ளே நுழைந்த ஜெய்சங்கர், ஒரு கட்டு ரூபாய் பணத்தை தந்துள்ளார். அதை அழகன் தமிழ்மணி வாங்கி பிரித்தால், ஒரு லட்சம் ரூபாய் இருந்ததாம். தான் கொடுத்ததைவிட, இரண்டு மடங்காக ஜெய்சங்கர் திருப்பி தந்திருந்தாராம். ஒரு பெருந்தன்மையான நட்பு என்றால் இப்படி இருக்கணும் என்று நெகிழ்ந்து சொல்லி முடித்திருந்தார் சித்ரா லட்சுமணன்.
உண்மைதான்.. சில மனிதர்கள் வாழும்போதே மறைந்துவிடுகிறார்கள்.. சிலர் மறைந்தும் வாழ்கிறார்கள்.. வள்ளல் குணம் கொண்ட ஜெய்சங்கரும் அப்படித்தான்..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications