"இதுதான் காளை வளர்ப்பு.." கிட்ட ஒருவரையும் வர விடல.. ஆனா பெண் அருகே வந்ததும் குழந்தை போல மாறிய காளை
சென்னை: தமிழர்கள் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அங்கே நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடக்கும். குறிப்பாக மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்க உலகெங்கும் கூட பார்வையாளர்கள் வருவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.
காளைகள்: ஜல்லிக்கட்டு என்றாலே அங்கே சீறிப் பாயும் காளைகளே அனைவருக்கும் நினைவில் வரும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை உரிமையாளர்கள் வருடம் முழுக்க தயார் செய்வார்கள்.. இந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு என்று தனியாக உணவுகள் அளிக்கப்படும். மேலும், இந்தக் காளைகளுக்கு என பிரத்தியேக பயிற்சிகளும் கூட அளிக்கப்படும்.
களத்தில் இந்த ஜல்லிக்கட்டு காளைகள் ஆக்ரோஷமாகச் சீறிப் பாயும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.. என்ன தான் களத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப் பாய்ந்து ஆக்ரோஷமாக இருந்தாலும் கூட அதன் உரிமையாளர்களுக்கு அவை எப்போதுமே குழந்தைகள் தான். அடக்க வரும் காளையர்களை மிரட்டி ஓட விடும் இந்த காளைகள், உரிமையாளர்கள் அருகே வந்ததும் அப்படியே அமைதியாக நின்றுவிடும். அதை விளக்கும் ஒரு வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
வீடியோ: அந்த வெள்ளை நிற காளை வாடிவாசலில் இருந்து சிங்கம் போலப் பாய்ந்து வந்து கெத்தாக நிற்கிறது. முடிஞ்சா கிட்ட வந்து தொட்டு பாருங்க என்ற தோரணையில் அந்த காளை நிற்கிறது. அங்கே இருக்கும் இளைஞர்கள், அந்த காளை அருகே வரவே தயங்குகிறார்கள். ஓரிருவர் பின்னால் இருந்து வந்து அந்த காளையை அடக்க முயன்றாலும், ஒரே சீற்றத்தில் அவர்களை அந்த காளை தள்ளிவிட்டுவிட்டது.
எந்தவொரு இளைஞர்களையும் அருகே வர அந்தக் காளை விடவே இல்லை. காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், காளையைப் பிடித்துச் செல்லுமாறு அறிவிப்பு வருகிறது. இளைஞர்கள் அந்தக் காளை அருகே செல்லவே அஞ்சிய நிலையில், அந்த காளையை வளர்த்த பெண் உரிமையாளர் அதன் அருகே வருகிறார். அந்த பெண் காளை மீது கயிற்றைப் போட்டு, அதைக் கட்டி கூட்டிச் செல்கிறார்.
குழந்தை போல மாறியது: அத்தனை நேரம் எந்தவொரு நபரையும் கிட்ட கூட விடாமல் அலறவிட்ட அந்த காளை, உரிமையாளர் வந்தவுடன் அப்படியே குழந்தை போல மாறி அவர் சொல்வதைக் கேட்டு அப்படியே அங்கிருந்து நகர்ந்தது. இது குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் அந்த காளை வளர்ப்பைப் பாராட்டி தள்ளி வருகின்றனர்.
இது குறித்து நெட்டிசன் ஒருவர், "காளை வளர்ப்புனா இப்படி இருக்கணும்.... சுத்தி இருக்குறவன ஒரு பையனையும் தொடக் கூட விடல, ஆனால் கடைசியா வளர்த்த பெண் கயிறு போடும் போது அன்பா குழந்தை மாறி நிற்கும் காளை" என்று பதிவிட்டுள்ளார். அவரது கருத்தைப் பலரும் ஆமோதித்து அந்த காளையையும் அதன் உரிமையாளரையும் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?

Click it and Unblock the Notifications