ஜனநாயகன் படம் லீக்.. எடிட்டிங் ரூமில் இருந்தே கசிந்தது அம்பலம்.. முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது
சென்னை: ஜனநாயகன் படம் லீக் விவகாரத்தில் ஏற்கனவே 6 பேரை தமிழக சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்த நிலையில் தற்போது மேலும் 3 முக்கிய குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். எடிட்டிங் ஸ்டூடியோவில் இருந்தே படத்தினை திருடி தொகுத்து இணையத்தில் வெளியிட்டது தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தை தணிக்கை செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகளால் படம் தற்போது வரை வெளியாகவில்லை.

படக்குழு தரப்பில் நீதிமன்றத்தை நாடியும் அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் இனி ஜனநாயகன் படம் தேர்தலுக்கு பிறகே வெளியாகும் என்று கூறப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் தான் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது.
முதலில் சில நிமிட காட்சிகளும், பின்னர் முழு படமும் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தியேட்டரில் ரிலீஸ் ஆகும் முன்பே, முழு படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதற்கு, நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஜனநாயகன் படக் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழுவும் தெரிவித்து இருந்தது.
ஜனநாயகன் படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க கோரி சைபர் குற்றப்பிரிவு போலீசில் படக்குழுவினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட இணையதள லிங்குகள் அழிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தான் ஜனநாயகன் படத்தை லீக் செய்தவர்களில் முக்கியமான 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் சைபர் கிரைம் போலீசார். படத்தை கசியவிட்டவர் ஃப்ரிலேன்ஸ் படத்தொகுப்பாளர் என்பது தெரியவந்து இருக்கிறது. அதாவது எடிட்டிங் ரூமில் இருந்து படத்தின் ரீல்களை அனுமதியின்றி எடுத்துள்ளார். பின்னர் இந்த திருடப்பட்ட ரீல்களை திரைப்படமாக மாற்றி இருக்கிறார். மேலும் திரைப்படத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து இணையதளத்திலும் கசிய விட்டு இருக்கிறார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் தற்போது கைது செய்து இருக்கிறார்கள்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்!












Click it and Unblock the Notifications