Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் படத்தை பார்க்க மாட்டேன்.. சிபிஐ விசாரணைக்கு விஜய்யை அழைத்தது சரியே.. கார்த்தி சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை பார்க்கப் போவதில்லை என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறிய கார்த்தி சிதம்பரம், கரூர் விவகாரத்தில் விஜய்யை விசாரணைக்கு அழைத்திருப்பது வாடிக்கையான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தரப்பில் திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் ஆட்சியில் பங்கு தேவை என்பதை தொடர்ந்து பேசி வருகின்றனர்.

Jananayagan Issue

அதேபோல் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்க்கு சென்சார் போர்டு தடையாக இருக்கும் சூழலில், அதுதொடர்பாக விஜய் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் ராகுல் காந்தி தொடங்கி காங்கிரஸ் எம்பிக்கள், நிர்வாகிகள் அனைவரும் ஜனநாயகன் தொடர்பாக பேசிவிட்டனர்.

அவர்களுக்கு விஜய் தரப்பிலோ, தவெக தரப்பிலோ ஒரு நன்றி கூற சொல்லவில்லை. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கார்த்தி சிதம்பரம் பேசுகையில், பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை.

படங்கள் வெற்றி, தோல்விகளை அடையலாம். ஆனால் சினிமாவுக்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதேபோல் ஜனநாயகன் படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நான் ஜனநாயகன் படத்தை பார்க்க போவதும் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்ற குரல் ஓங்கி ஒலிப்பது தனித்துவம் வாய்ந்த உலகில் யாருக்கும் உதிக்காத சிந்தனை இல்லை.

அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகள் தேர்தலில் வென்று, ஆட்சியில் இடம்பெறவே நினைக்கிறார்கள். இது சராசரியான எதிர்பார்ப்புதான். அதுதான் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. சட்டசபைத் தேர்தல் தொடர்பான காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக திமுகவுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அதேபோல் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை என்பது வாடிக்கையான ஒன்றுதான். அதேபோல் பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார் என்கிறார்கள். அவர் வந்தபின் தமிழ் கலாச்சாரமே பிடிக்கும்.. வேட்டி கட்டினால் தான் தூக்கம் வருகிறது. இரவில் பாரதியார் கவிதை கேட்டுதான் தூங்குவேன். திருக்குறளை படிக்காத நாளே இல்லை என்பார். இதனை 4 மாதங்களுக்கு சொல்வார் என்று கிண்டல் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+