• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரூபாய் நோட்டை எச்சில் தொட்டுத்தானே எண்ணுறோம்.. கொரோனா பரவியிருக்கணுமே.. இல்லையே.. மன்சூர் பொளேர்!

|

சென்னை: "ரூபாய் நோட்டு.. அதை தொட்டுதானே எண்ணறீங்களே? அது எத்தனை வீடுகளில் பரவி இருக்கும்? ரூபாய் நோட்டை எரிச்சிடுவீங்களா? தண்ணி ஊத்தி சோப்பு போட்டு கழுவறீங்களா? நோட்டை எச்சை தொட்டுதானே எண்ணறோம்? அதுல இந்நேரம் கொரோனா வந்திருக்கணுமே? இந்நேரம் லட்சக்கணக்கானோர் செத்திருக்கணுமே? ஏன் இப்படி பீதியை கிளப்பிட்டு இருக்கீங்க?" என்று மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பி உள்ளார்.

  கொரோனாவிற்கு வீட்டுக்கு வீடு குவார்ட்டர் சரக்கு கொடுங்களேன்.. மன்சூர் அலிகான்

  கொரோனாவிற்கு எதிராக மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.... கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேவரக் கூடாது என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

  இந்த அறிவிப்புக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் மன்சூரலிகான் கேள்விகளை எழுப்பி உள்ளார். சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடமும் மன்சூரலிகான் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

  12 மணி நேரத்தில் சாகும் கொரோனா.. மோடியின் மக்கள் ஊரடங்கு.. வாட்ஸ் ஆப்பில் உலாவும் செய்தி உண்மையா?

  திரையுலகம்

  திரையுலகம்

  "தியேட்டர்களை எல்லாம் மூடுன்னு சொல்லிட்டாங்க.. அப்போ அந்த இழப்பை யார் சரிகட்டுவது? பணம் எப்படி வரும் தயாரிப்பாளருக்கு? ஒரு டெக்னிஷியன் இல்லை.. எவ்வளோ பேர் இந்த திரையுலகில் இருக்காங்க.. கொரோனா கொரோனான்னு சொல்றீங்க? டிஜிட்டல் இந்தியான்னு சொல்றீங்களே, சீனாவில் பரவி எத்தனை நாள் ஆச்சு? ஏன் எல்லாரையும் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே விட்டீங்க?

  போராட்டம்

  போராட்டம்

  சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிரான போராட்டங்கள் பெருகிட்டு இருக்கு.. இவங்க யாரையும் போய் நேர்ல இதுவரை பார்க்கல... 100 பேர் ஆயிரமாகி, அது பல்லாயிரத்துல பெருகி இன்னைக்கு வந்துருக்கு.. இந்த போராட்டம் நாளைக்கு லட்சக்கணக்கில் வரும்? அதை தடுப்பதற்காகவே கொரோனா வைத்து அரசியல் செய்வதாக தான் நான் இதை பார்க்கிறேன்.

  மருந்து எங்கே?

  மருந்து எங்கே?

  இழுத்து மூட சொல்லிட்டீங்க? அன்றாடங்காய்ச்சி என்ன செய்வான்? நஷ்ட ஈடு அவனுக்கு தர வேணாமா? இன்னைக்கு உழைச்சாதான் அவனுக்கு காசு.. பிரதமர் சொல்லிட்டாரு, எல்லாரும் வீட்டில உட்கார்ந்துக்குங்க.. யாரும் வெளியே வராதீங்கன்னு... என்ன வல்லரசு? என்ன கொரோனா? அறிகுறி என்ன? 10 பேருக்கு சளி, காய்ச்சல் இருக்கும், சளி இருந்தால் காய்ச்சல் வரத்தானே செய்யும்? இதுவரைக்கும் மருந்தும் நீங்க கண்டுபிடிக்கல?

  ரூபாய் நோட்டு

  ரூபாய் நோட்டு

  கைகுலுக்கினால் வருதாம்.. தொட்டால் தீட்டு என்பது மாதிரி கொண்டு வந்து நிறுத்திட்டாங்க... இதை நல்லா புரிஞ்சிக்கிறவங்க புரிஞ்சிக்குங்க.. நம்ம பண்பாடு என்பது ஆரத்தழுவி, வரவேற்பதுதான்.. இதுதான் சமத்துவம்.. ஆனால் இப்போ வேற மாதிரி கொண்டு வந்துட்டாங்க... இந்த பணம் எண்ணறீங்களே.. ரூபாய் நோட்டு.. அதை தொட்டுதானே எண்ணறீங்களே? அது எத்தனை வீடுகளில் பரவி இருக்கும்? ரூபாய் நோட்டை எரிச்சிடுவீங்களா? தண்ணி ஊத்தி சோப்பு போட்டு கழுவறீங்களா? நோட்டை எச்சை தொட்டுதானே எண்ணறோம்? அதுல இந்நேரம் கொரோனா வந்திருக்கணுமே?

  திருடர்கள்

  திருடர்கள்

  இந்நேரம் லட்சக்கணக்கானோர் செத்திருக்கணுமே? ஏன் இப்படி பீதியை கிளப்பிட்டு இருக்கீங்க? நான் மத்திய அரசை கேட்டுக்கிறது, 15 லட்சம் நீ தரல.. யார் பேங்குலயும் போடல.. அதனால குறைஞ்சது 2 ஆயிரம், 5 ஆயிரமாவது எல்லா ஏழைகளுக்கும் குடுங்க.. வீட்டை விட்டு 15 நாள் வராம இருக்க என்ன பண்ணுவான் அவன்? ஏற்கனவே அவன் திருடனா மாறிட்டு இருக்கான், செயின் அறுக்கிறான், செல்போன் திருடறான்.. என்ன செய்வாங்க? பொழைக்க வழியில்லை.. எல்லா வேலையையும் புடுங்கிட்டீங்க? வேலைவாய்ப்பும் இல்லை.

  கோழி வியாபாரிகள்

  கோழி வியாபாரிகள்

  நான் மத்திய-மாநில அரசை எதிர்க்கல.. இவ்வளவு நாள் ஆயிடுச்சு.. மக்களே அவங்களை பார்த்துப்பாங்க.. எங்களுக்கு நஷ்ட ஈடு தாங்க.. என்னை பொறுத்தவரைக்கும் கொரோனா வைரஸ், கரீனா வைரஸ் இல்லை.. இங்க வா.. இந்த பச்சை முட்டையை உடைச்சி குடிச்சிருக்கேன்.. சாப்பிட்டு காட்டறேன் பாரு.. அதனால கொரோனா வராது.. சத்துணவு கூடத்தை மூடிட்டாங்க.. கோழி வியாபாரிகள் என்ன பண்ணுவாங்க? 22-ம்தேதி வெளியே வராதீங்கன்னு சொல்றதுக்கு ஒரு பிரதமரா?

  வல்லரசுகள்

  வல்லரசுகள்

  இந்த வல்லரசு என்ன கண்டுபிடிச்சுச்சு மருந்தை? ஏர்போர்ட்டில நாலு பேரை பிடிச்சு நிறுத்திறதுக்கு பதிலாக 180 கோடி மக்களை ஏன் தடுக்கிறே? சிஏஏ-க்கு எதிராக நடக்கறது? எவ்வளவு பெரிய கேவலமான குற்றச்சாட்டு.. 400, 500 பேரை வெட்டி சுட்டு தள்ளி இருக்காங்க? எல்லாருமே அப்பாவிங்க.... அவங்க பாதிக்கப்பட்ட மக்களை போய் பார்த்தீங்களா? டெல்லியிலதானே இருக்கீங்க எல்லாரும்? உங்களை எப்படி நம்புறது? ஒரு சட்டத்தை இயற்றிட்டு, அதை மக்கள் மேல திணிக்காதேன்னு தைரியமா ஒரு தம்பி இன்னைக்கு சொல்லுதா இல்லையா? அந்த தைரியம் ஏன் மத்தவங்களுக்கு வரல?

  பாகிஸ்தான்

  பாகிஸ்தான்

  கொரோனாவுக்கு மருந்துதான் கண்டுபிடிக்கலையே.. அப்பறம் நாண்டுக்கிட்டு சாகுங்களேன்.. இங்க செத்தவன் எல்லாம் கொரோனாவால்தான் செத்தான்னு உங்களுக்கு தெரியுமா? அந்த பயத்துலயே செத்திருப்பான்.. சாதாரண இடத்துல கூட பூட்டு போட்டு வெச்சிருக்காங்க.. ராணுவத்தைவிட மோசமான கட்டமைப்பில நாட்டை கொண்டு போய்ட்டு இருக்காங்க.. எந்த உரிமையும் இப்போ நமக்கு இல்லாம போச்சு.. 2 மாசமா கொரோனா பத்தி தெரியுது இல்லை? ஏன் உள்ளே விட்டீங்க? ஒரு புறா பாகிஸ்தானை தாண்டி வர முடியுமா? உள்ளே வந்தால் சுட்டுருவான்... 350 கிலோவோட அந்த வண்டி எப்படி வந்துச்சு?

  எப்படி சாப்பிடுவான்?

  எப்படி சாப்பிடுவான்?

  நான் எந்த அரசையும் எதிர்த்து பேசல... ஆனா ஏழைகளுக்கு நஷ்ட ஈடு தாங்கன்னு கேட்கிறேன்.. வழி சொல்லுங்க.. கோமியம் குடிச்சா சரியா போயிடும்னு சொல்றீங்க இல்லை, அதை குடுங்க ஜனங்களுக்கு? தமிழக அரசை நான் கேட்டுக்கிறது உடனடியாக மத்திய அரசுகிட்ட பேசி ஏழைகளுக்கு பணம் குடுங்க.. வேலைக்கே போகாதவன் எப்படி சாப்பிடுவான்? பேங்கில் போடாதீங்க.. ஏன்னா அது இன்னொருத்தனுக்கு போயிடும்.. எப்படி நைட்டோட நைட்டா ஓட்டுக்கு பணம் தர்றீங்களோ, அது மாதிரி இந்த பணத்தை எங்களுக்கு குடுத்துடுங்க.. சீனா கன்ட்ரோல் ஆயிடுச்சுன்னு சொல்றாங்க இல்லை? இது எப்படி சாத்தியம்? சோப்பு போட்டு கழுவினால் கொரோனா போயிடுமா? அந்த நோய் இவ்ளோ பெரிய ஆளை காலி பண்ணுதாம், ஆனா சோப்பு போட்டு கழுவினால் போயிடுதாம்? அந்த சானிடைசர் விக்கிறவனுக்கு ஏதாவது கமிஷன் போகுதோ என்னவோ?

  சர்ட்டிபிகேட்

  சர்ட்டிபிகேட்

  பிரதமர் நல்லவர்னு சொல்றீங்க இல்லை, அங்க போராடிட்டு இருக்கிறவங்களை ஏன் போய் பார்க்கல? உலகமெல்லாம் அவரு சுத்தி வந்துட்டாரு.. இந்த 6 மாசமா அவரால எங்கியும் போக முடியல.. மோசமான, கேனைத்தனமா, ஒரு அப்பா சர்ட்டிகேட்டை கொண்டுவாங்கன்னு சொல்றே? உங்களுடையது முதல்ல குடுங்க.. 95 வயசு தாதிமார்கள் ஆலங்கட்டி மழையில போராடிட்டு இருக்காங்க.. அவங்களை உங்களால எதிர்க்க முடியல.. அவங்க கேட்கிற கேள்விகளுக்கு நாண்டுக்கிட்டு செத்துடணும்.. அப்படி கேள்வி கேட்கிறாங்க அவங்க.

  ஒயின் ஷாப்

  ஒயின் ஷாப்

  கொரோனாவுக்கு என்ன முன்னெச்சரிக்கை எடுக்குது இந்த அரசு? என்ன வெங்காயத்தை நடக்குது? ஒயின் ஷாப்பை மூடுச்சா? அதைமூடிட்டா வருமானம் போயிடும் இல்லை? யாரும் வெளியே வராதீங்க.. 5 மணிக்கு கை தட்டுங்க? இதுவா திட்டம்? இதுவா ஜனநாயகம்? நீ மட்டும் நாடு பூராவும் பறந்து போவே? இப்ப போயேன் பார்க்கலாம்.. இந்த நாடு நல்லா இருக்கும்! கொரோனா என்பது இருக்கலாம்.. ஆனால் அதன் பீதியிலேயே செத்து போயிடுவாங்க.. நெத்தியில வச்சு டெஸ்ட் பண்ணி பார்க்கிறியே அது என்ன கொரோனா இருக்கான்னு பார்க்கிற மிஷினா? அது ஜுரம் இருக்கான்னு பார்க்கிறது? மக்களை முதல்ல காப்பாத்துங்க.

  ஜனநாயகம்

  ஜனநாயகம்

  நான் முன்னெச்சரிக்கையை தப்பு சொல்லல.. தமிழ்நாட்டில இல்லைன்னு கொரோனா விஜயபாஸ்கர் சொல்லிட்டாரு.. ஆனா இப்படியெல்லாம் மக்களை வீட்டுக்குள்ள அடைச்சி வெக்கிறதுக்கு காசு தாங்க.. மக்களை மேலும் மேலும் குற்றவாளி ஆக்காதீங்க.. அவன் திருடதான் பார்ப்பான்.. நெய்வேலியில ஷூட்டிங்கில் இருக்கிறவரை ஷூட்டிங் நிறுத்தி அவங்க வண்டியில கூட்டிட்டு வர்றாங்களே, இதுவா ஜனநாயகம்? உண்மையிலேயே கொரோனா வந்துடுச்சுன்னா, இந்நேரம் பணத்தை எல்லாம் எரிச்சு காட்டியிருக்கணும் அரசு.. நோய்ன்னு ஒன்னு வந்திருந்தால், இந்நேரம் 2 லட்சம் பேர் பொட்டுன்னு போயிருப்பான்.. அதனால டிஜிட்டல் இந்தியாவுல நான் கேட்டுக்கிறது எல்லாருக்கும் நஷ்ட ஈடு தரணும்.. ஏழை பாளைகள் பாதிக்கப்பட கூடாது" என்றார்.

   
   
   
  English summary
  janata curfew: mansoor alikhan slams central gov and pm modi
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X