திருப்பூரில் கோட்சே நினைவேந்தல்; சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்க சதி; கொதிக்கும் ஜவாஹிருல்லா!
சென்னை: மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவுக்கு தமிழகத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்ட நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயலை இனி யாரும் செய்யக்கூடாது என்கிற உணர்வைத் தரும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''தேசத்தந்தை மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சே 1949 நவம்பர் 15ல்குற்றம் நிரூபிக்கப்பட்டு அரியானா மாநிலம் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடைந்து இந்திய நாட்டிற்குக் காந்தி தேசம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கோரிக்கை வைத்தார். அந்த அளவிற்கு மகாத்மா காந்தியைப் போற்றும் தமிழகமண்ணில் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தில் திருப்பூர் சிவசேனா அலுவலகத்தில் யுவ சேனா அமைப்பின் சார்பில் வீரவணக்க நாள் கொண்டாடி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் தமிழகத்தின் சமூக நல்லிணக்க பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கும் வகையிலும் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் தமிழகத்தின் தத்துவார்த்த சிந்தனையைச் சிதைக்கும் முயற்சியாகும்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கடும் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இது போன்ற செயலை இனி யாரும் செய்யக்கூடாது என்கிற உணர்வைத் தமிழக அரசும் காவல்துறையும் ஏற்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள்கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications