Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'நீ இஸ்லாமியர்.. கோயிலுக்கு வரக்கூடாது'.. ‘நடிகர்’ பொன்.மாணிக்கவேல் மீது ஆக்சன் எடுங்க - ஜவாஹிருல்லா

Subscribe to Oneindia Tamil

சென்னை: முஸ்லிம் பத்திரிகையாளரிடம் அநாகரீகமாக பேசிய ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வந்திருந்தார். அங்கு சாமி கும்பிட்ட அவர், சிலைகள் மற்றும் செப்பேடுகள் வைக்கப்பட்டிருந்த அறைகளையும் பார்வையிட்ட பிறகு கோவில் வளாகத்திலேயே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசை விமர்சித்து பேசிக்கொண்டு இருந்தார்.

Jawahirullah demand action against retired Pon.Manikavel who spoke indecently to a Muslim journalist

பொன்.மாணிக்கவேல் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்ததால் செய்தியாளர் ஒருவர் சுருக்கமாக பேசுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் ஆவேசமான பொன் மாணிக்கவேல், "நான் அதை கடைசியில்தான் சொல்வேன். உங்களின் தாத்தா பெயர் என்ன?" என்று கேட்க, செய்தியாளர் அபூபக்கர் என பதிலளித்தார். தாத்தாவின் தாத்தா பெயர் என்ன என்று கேட்டதற்கு தமீம் என அவர் கூறினார். உடனே அவரது தாத்தா பெயர் என்ன என்று கேட்டபோது முஜிபுர் ரஹ்மான் என செய்தியாளர் தெரிவித்தார்.

இதனை கேட்ட பொன்.மாணிக்கவேல் சுற்றி நின்றவர்களிடம், செய்தியாளர் பொய் சொல்கிறார் என கூறினார். செய்தியாளர் பொய் எல்லாம் சொல்லவில்லை. ஆவணம் இருக்கிறது என்று தெரிவித்தார். உடனே பொன் மாணிக்கவேல், "எந்த ரெக்கார்டையும் காட்டவேண்டாம். அதெல்லாம் இருக்காது. நீங்கள் சொல்வது பொய்." என்றார். உங்களை பொறுத்தவரை இந்த கோயிலை பற்றி விசாரிக்க யோக்கிதை இல்லை. இது இந்து கோயில்." என்று மிரட்டும் வகையில் பேசினார். பொன் மாணிக்கவேலின் இந்த செயலை பார்த்த அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை கண்டித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதில், "சாதி, மதம் என அனைத்து வகையான வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர்களே பத்திரிகையாளர்கள். இந்த அடிப்படையே தெரியாத ஒருவர், காவல்துறையில் உயர் பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அந்தவகையில், பொன் மாணிக்கவேல் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய காவலத்திலும் அவருடைய செயல்பாடுகள் இந்த எண்ணத்தின் அடிப்டையில்தான் இருந்ததா என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆகவே, பத்திரிகையாளரின் மதத்தை குறிப்பிட்டு, அவர் கேள்வி எழுப்ப "யோக்கியதை" அற்றவர் என்று கூறிய பொன் மாணிக்கவேலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர்களை மதரீதியாக இழிபடுத்தியதுடன், பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய பொன் மாணிக்கவேல் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கிறது." என குறிப்பிட்டு உள்ளது.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பதிவிட்டு உள்ளதாவது, "காவல்துறை இந்த 'நடிகர்' மீது உரிய சட்ட நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். 'நீ இஸ்லாமியர்.. நீ கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது' நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பொன்.மாணிக்க வேல்" என்று குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் டேக் செய்து உள்ளா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+