500 மதுக்கடைகளை மூடியது மட்டும் போதாது! தமிழகம் மதுவில்லா மாநிலமாக வரணும்! ஜவாஹிருல்லா ஆவல்!
சென்னை: 500 மதுக்கடைகளை மூடினால் மட்டும் போதாது, தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழவேண்டும் என்ற ஆசையை பகிர்ந்துள்ளார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வாழ்விரிமைக் கட்சியை போலவே மனிதநேய மக்கள் கட்சியும் பூரண மதுவிலக்கு கொள்கையை பின்பற்றி வரும் அரசியல் கட்சியாகும். இதனிடையே மதுக்கடைகள் மூடல் குறித்து ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;

''தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டபேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மதுக்கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணைவெளியிடப்பட்டது.
அந்த அரசாணையின் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூடி தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இதற்கு வழிவகுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது மூடப்பட்டுள்ள 500 மதுக்கடைகள் மட்டுமின்றி தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்''.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications