ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாநிலங்களை கொண்டு வர முயற்சி! மமக சாடல்!
சென்னை: ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை முன்மொழிந்து பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சி இது என மமக பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
அரியானா மாநிலத்தில் சிந்தனை அமர்வு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற மாநில உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி நாடு முழுவதும் காவல்துறைக்கு ஒரே சீருடை இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார்.
அவரின் இந்த கூற்று மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். கூட்டாட்சி தத்துவத்தை முன்னெடுக்காமல் மாநிலங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநிலமும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் பெரும் முனைப்போடு தான் செயலாற்றி வருகின்றன. இந்தியாவில் மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பாகுபாடுகள் உள்ளன. வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பதே இந்திய மக்களின் சிறப்பு இயல்பு.
மேற்குவங்க காவல்துறையின் சீருடை வண்ணம் வேறு தமிழ்நாட்டில் காவல்துறையின் சீருடை வண்ணம் வேறு. தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பணி காவல் துறையின் சீருடை வண்ணம் வேறு.
தமிழகத்தில் பாமர மக்கள் கூட சட்டம் ஒழுங்கு காவலரையும் போக்குவரத்து காவலரையும் சீருடை வண்ணங்களை வைத்து மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். இத்தகைய சூழலில் பிரதமர் முன்மொழிந்துள்ள ஒரே நாடு, ஒரே காவலர் சீருடை என்பது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல் ஆகும்.
இந்த முயற்சிக்குத் தமிழகம் உள்ளிட்ட மாநில சுயாட்சி தத்துவத்தை முன்னிறுத்துகிற அனைத்து மாநிலங்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications