ரெடியாகும் அரசு.. ஒரே நேரத்தில் ஜெ. மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை! அமைச்சரவை முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்களின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆகஸ்டு 30 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று ஒரு நாள் முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் கூடியது.

இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்! முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை!

அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சற்றுமுன்பாக நடந்து முடிந்தது. இதில், ஆன்லைன் ரம்மி தொடர்பாக இயற்றப்படும் அவசர சட்டம் நீதிமன்றம் சென்று தடை பெறமுடியாத அளவுக்கு இருக்கும் வகையில் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் அறிக்கை

சட்டப்பேரவையில் அறிக்கை

அதேபோல், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம்

கடந்த 2016 ல் தமிழ்நாடு முதலமைச்சராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் விசாரணை நடத்த அதிமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. பல்வேறு கால நீட்டிப்புக்கு பின் விசாரணை அறிக்கையில் சமீபத்தில் ஆறுமுகசாமி அரசிடம் தாக்கல் செய்தார்.

 அருணா ஜெகதீசன்

அருணா ஜெகதீசன்

கடந்த 2018 ல் தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் 100 வது நாளான மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளில் 2 பெண்கள் உட்பட 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+