பழைய சிலை மீது விமர்சனங்கள்.. ஜெயலலிதாவிற்காக வடிக்கப்பட்ட புதிய சிலை.. இது எப்படி இருக்கு பாருங்க?
Recommended Video

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்காக அதிமுக சார்பில் புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது.

புதிய சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒப்புதல் வழங்கிய நிலையில்
சிலையின் இறுதிகட்ட வடிவமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.
இந்த சிலை விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
புதிய சிலைக்கான புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சிலை இப்போது சாக்குப்பையில் வைத்து மறைக்கப்பட்டுள்ளது.
[ஜெயக்குமார் ஆடியோவுக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமுமில்லைங்க- தங்கதமிழ்ச்செல்வன்]
இதற்கு முன்பாக திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலையை பார்த்தால் அவரை மாதிரியே தெரியவில்லை என்ற விமர்சனங்கள் வந்தன. கையில் ஆறு விரல் இருப்பதாக கூட சர்ச்சை எழுந்தது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்றாலும், ஏனோ தெரியவில்லை, ஜெயலலிதா மாதிரியே இல்லை அந்த சிலை.

இதையடுத்துதான், புதிய சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த சிலையும் கூட அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள எம்ஜிஆர் சிலை அவரை பிரதிபலிக்கும் அளவுக்கு, ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் வகையில், தத்ரூபமாக இல்லை. ஜெயலலிதாவின் முழு உருவ சிலை இதுவாகும். எனவே ஜெயலலிதாவின் உடல் பருமன் சிலையிலும் பிரதிபலிக்கும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இந்த சிலையோ, சற்று ஒல்லியாக உள்ளது.
நெற்றி பகுதியும் உள்ளடங்கி உள்ளது. ஜெயலலிதா நின்று பார்க்கும்போது இருக்கும் கம்பீரத்தை இந்த சிலையில் வடிவமைக்க முடியவில்லை. சிலை கண் பகுதியில் கம்பீரம் இல்லை என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. மீண்டும் சிலை வடிவமைப்பில் மெத்தனம் நடந்துள்ளதா, அல்லது, ஜெயலலிதா சிலையை வடிவமைக்கும் திறமையுள்ள சிற்பிகள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications